பாரிஸ், செப். 10 — திங்கட்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. காரணம், ஒரு இந்து மதப் பிரிவின் 93 வயது குரு பெண்கள் முன்னிலையில் இருக்கக் கூடாது எனக் கோபுர நிர்வாகத்தை கோரியதைத் தொடர்ந்து, பெண் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததுதான்.
குஜராத்தை அடிப்படையாகக் கொண்ட BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) பிரிவினர், பாரிஸிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள Bussy-Saint-Georgesஇல் புதிய பெரிய கோயிலைத் திறந்துள்ளனர். இது ஐரோப்பாவில் பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. babs mandir official அவர்களது உத்தியோகபூர்வ இணையதளமாகும்.
கோயில் திறப்பு விழாவுக்காக பிரான்ஸ் வந்திருந்த அந்தப் பிரிவின் குரு, ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட விரும்பினார். அவரது கொள்கைப்படி பெண்கள் அவரது முன்னிலையில் இருக்கக் கூடாது. அதன்பேரில் தனிப்பட்ட வருகை கோரப்பட்டது.ஐபல் கோபுர நிர்வாகம் இந்த நிபந்தனையை ஏற்று, பெண் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட பெண்கள் அனைவரும் மறைந்துகொள்ளுமாறு உத்தரவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன குறித்த செய்தியின் மூலம்
சனிக்கிழமை நடந்த இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திங்கட்கிழமை பெண் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அதனால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. BAPS மிகவும் செல்வந்த அமைப்பு; உலகம் முழுவதும் பெரிய கோயில்களைக் கட்டுவதில் பிரசித்தி பெற்றவர்கள். இவர்களின் கொள்கையில் உயிருள்ள குருவுக்கு முழுமையான கீழ்ப்படிதல் முக்கியத்துவம் பெறுகிறது.
2021இல் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள BAPS கோயிலில் FBI சோதனை நடத்தியது. போலி மத விசாக்களில் அழைத்து வரப்பட்ட தலித் தொழிலாளர்கள், பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு, குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர், மணித்தியாலத்துக்கு ஒரு யூரோ ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஆதாரம் பிரெஞ்சு குடியரசின் அடையாளமான ஈபிள் கோபுரம், பெண்கள் முன்னிலையில் இருக்க மறுத்த ஒரு மதத் தலைவரின் வருகை தொடர்பான நிபந்தனையால் மூடப்பட்டது என்பதே தற்போதைய சர்ச்சையின் மையமாகும்.

