Homeபூராயம்

பூராயம்

spot_imgspot_img

பாரிஸ் 21 வயது தமிழ் யுவதி எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்!

பாரிஸ் புறநகர் பகுதியில் வாழும் ஈழ தமிழ் யுவதி ஒருவர் செய்த சம்பவம்..பேசு பொருளாகியுள்ளது.. திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்… அதிர்ச்சியடைந்த பெற்றோர் தெரிந்தவர்கள்,உறவுகளிடம் தேடியலைந்துள்ளனர்.. பின்னர் இரண்டு நாள் கழித்து...

பாரிஸ் தமிழரின் ஐந்து லட்சம் சுவாகா! திருத்த கஷ்டம்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.  இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது. கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்.. இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று... ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.  நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்...எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்...  உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று. À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent soixante mille roupies lors du...

இலங்கை தொடர்பாக உண்மையை சொன்ன பாரிஸ் சாமியார்!

இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார். இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார். பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது...

பிரான்ஸ் தமிழ் கணவரின் அடாவடி! பறந்த மனைவி!

பிரான்ஸில் வாழ்ந்த தமிழ் குடும்பம் ஒன்றில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.தமிழ் கணவர்தனது மனைவி பிள்ளைகளை எங்கு வெளியில் விடாமல் யாருடனும் கதைக்க விடாமல் வீட்டிற்குள் இறுக்கமாகவைத்திருந்திருக்கின்றார் பல வருடங்களாக... இந்த வருடம் திடிரென மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு ஊருக்கு வந்திருக்கின்றார்..எப்படி இப்படி ஒருஇறுக்கமான கணவர் போக விட்டார் என்று எல்லா சொந்தங்களுக்கும் ஒரே ஆச்சரியம்.. அப்பொழுது ஒரு கதை... இதே பிரான்ஸில் இன்னொரு கணவர் இப்படி ஒரு மனைவியை தனித்து வீட்டில்வைத்திருந்து அவர் மனைவி ஒரு கட்டத்தில் மனநோயாளியாகி பைத்தியம் பிடித்திருக்கின்றது... சிலநேரங்களில் பைத்தியம் முற்றி கணவருக்கும் அடி கடி எல்லாம் விழ ஆரம்பித்திருக்கின்றது.. இந்த கதையை எப்படியே கேள்விபட்ட கணவர்,தனது இறுக்கத்தை தளர்த்தி மனைவி பிள்ளைகளை ஊருக்குசென்று வர அனுமதித்திருக்கிறாராம்.. கருத்து: இதில இருந்து என்ன தெரியுது என்றால்,ஆம்பிளயோட எல்லா இறுக்கமும் கொஞ்சநாளைக்குதான்,பொறுமையான பொம்பிளைக்குதான் கடைசி வெற்றி

சாதாரண வேலை பார்க்கும் பிரான்ஸ் ஈழ தமிழர் ஒருவரின் மகனின் முன்மாதிரியான செயற்பாடு! 

எமது மக்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை அண்மித்து பிரான்ஸில் வாழ்கின்றனர்.அநேகமாக எல்லோருமேதமிழர்களுக்கும் பண்பாடுகள்,பிரான்ஸ் நாட்டின் சில பல சரியான வழிமுறைகளை எடுத்து கொண்டு எமதுவாழ்க்கையை உருவாக்கி வாழ்கின்றோம் ஆனாலும் இலங்கையில் இருந்து வந்து கடினமாக உழைத்து முன்னேறும் பெற்றோர்கள்,தமது பிள்ளைகளுக்குசொகுசான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொடுக்கின்றனர்.ஆனால் சொகுசான பாதுகாப்பானவாழ்க்கை அவர்களை கொஞ்சம் பலவீனப்படுத்தி கொள்கின்றது. எனவே எமது பிள்ளைகளை நிதி கையாளுதலை நாம் முழுமையான பொறுப்பாக எடுத்து கொள்வதை விடஅவர்களை சிறு வயது முதலே சரியாக பழக்கி எடுத்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.எவ்வாறு சிறப்பாக ஒருமாணவராக குடும்ப பணத்தில் தங்கி வாழாமல் சொந்தமாக வாழும் போதே நமக்கான புதிய சவால்களை சரியாகசந்தித்து கொள்ள முடியும்!  இல்லையென்றால் நமது பெற்றோர்கள் தாங்கள் பார்த்து கொள்வார்கள் என்ற பாசத்தில் தமது பிள்ளைகளைபலவீனப்படுத்தி விடுவார்கள்! உங்கள் பிள்ளைகளை ஒருவர் இருவர் என்று பார்க்காதீர்கள்! அடுதடுத்ததலைமுறையை உருவாக்க போகின்றவர்கள் என்று பாருங்கள்! எனவே உங்கள் பிள்ளை பிள்ளையின் பிள்ளைஎன தொலைநோக்காக சிந்தித்து விதைகளை இப்பவே போடுங்கள்... உலகில் பெரிதாக நல்லா வரும் எல்லா குடும்பங்களும் இப்படி சிந்தித்து வளர்ந்து வந்தவைதான்! எதையும்யோசிக்காமல் குறுகிய வட்டத்தில் பாசத்தை கொட்டி பலவீனப்படுத்தி குடும்பம் பிள்ளைகளை கெடுத்து நாம்என்னத்தை காண போகிறோம்? இதற்காகவே இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்படுகிறோம்?  பிரான்ஸில் நிதி மேலாண்மை தொடர்பில் பிரான்ஸில் சாதரண வேலை பார்க்கும் தமிழர் ஒருவரின் மகன்எவ்வாறு தனது பணத்தை படித்து கொண்டே உழைத்து கொள்வது தொடர்பாகவும் தமது வீட்டில் பணத்தைஎவ்வாறு நிர்வகிப்பது தொடர்பிலும் எங்களுக்கு எழுதி அனுப்பிய கட்டுரை முழுவடிவம் கீழேகொடுத்துள்ளோம்... கவனமாக வாசித்து தேவையானதை எடுத்து மனதில் இருத்தி கொள்ளுங்கள்!  பணத்தை உழைப்பதை காட்டிலும் நிர்வகித்து கொள்வதே மிக கடினம்,எல்லாராலும் உழைக்க முடியும் ஆனால்உழைத்த பணத்தை நிர்வகிக்க முடியாது! சரியான பண நிர்வாகம்தான் உங்களுக்கும் பிரான்ஸின் மிகபெரியபணக்காரன் ஆர்னால்ட்டுக்கும் இடையிலான சின்ன வித்தியாசம்.. காரணம் நீங்கள் இருவர் கையிலும் ஒருகாலத்தில் 1000€ தான் இருந்தது.. ஆனால் இன்று அவர் பல லட்சம் கோடி யூரோக்களுக்கு அதிபதி! நாம்இன்னும் சில பல ஆயிரம் யூரோக்களிடையேதான் எமது வாழ்க்கை ஓடி கொண்டுள்ளது. அறிமுகம்: பிரான்சில் ஒரு மாணவராக உங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்குவது, உங்கள் நிதியை திறம்படநிர்வகிப்பது உட்பட உற்சாகமான வாய்ப்புகளையும் சவால்களையும் சமாளிக்க கற்று தரும். மாணவர்வாழ்க்கைக்கான பட்ஜெட்டில் இருந்து உதவித்தொகை மற்றும் மானியங்கள், பகுதி நேர வேலை வாய்ப்புகள், மாணவர் கடன்கள் மற்றும் வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குதல் வரை, இந்த கட்டுரை பிரான்சில் உள்ளமாணவர்களுக்கு ஒரு விரிவான வழிகாட்டியாக செயல்படுகிறது.   இவற்றின் முக்கிய அம்சங்களை ஆராய்வோம் மற்றும் நிதி சவால்களை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கானஉத்திகளைக் கண்டுபிடிப்போம்.  மாணவர் வாழ்க்கைக்கான பட்ஜெட்: உங்கள் படிப்பு முழுவதும் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்க யதார்த்தமான பட்ஜெட்டை உருவாக்குவதுமிகவும் முக்கியமானது.  வாடகை, பயன்பாடுகள், மளிகை பொருட்கள், போக்குவரத்து மற்றும்பாடப்புத்தகங்கள் போன்ற உங்களின் அத்தியாவசிய செலவுகளை பட்டியலிடுவதன் மூலம் தொடங்கவும்.  அதுஉங்கள் பணமோ இல்லை அம்மா அப்பா பணமோ... வரவு செலவை சரியாக வைத்து கொள்ளுங்கள்.  உங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக ஒதுக்குங்கள்.  உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை திறம்படக் கண்காணிக்க பட்ஜெட் பயன்பாடுகள் அல்லதுவிரிதாள்களைப் பயன்படுத்துங்கள்,நான் சொந்த கையால் எழுதி வைப்பதை அதிகம் விரும்புகின்றேன். எடுத்துக்காட்டு செலவுகள்: வாடகை: சராசரி மாணவர் விடுதி / உங்கள் வீட்டு வாடகை செலவுகள் நகரம் மற்றும் வீட்டு வகையைப்பொறுத்து மாதத்திற்கு € 300 முதல் € 800 வரை இருக்கலாம். பயன்பாடுகள்: இதில் மின்சாரம், தண்ணீர், இணையம் மற்றும் வெப்பமாக்கல் ஆகியவை அடங்கும்.  சராசரியாக, மாதத்திற்கு €70 முதல் €150 வரை செலவாகும். மளிகை பொருட்கள்: உங்களின் உணவுப் பழக்கம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து, உணவுச்செலவுகளுக்காக மாதத்திற்கு சுமார் €150 முதல் €200 வரை ஒதுக்குங்கள். போக்குவரத்து: பாரிஸ் போன்ற முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்து பாஸ்கள் பாஸ் வகை மற்றும்பயணித்த தூரத்தைப் பொறுத்து மாதத்திற்கு €20 முதல் €75 வரை இருக்கும். உதவித்தொகை மற்றும் மானியங்கள்: பிரான்சில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறு உதவித்தொகை மற்றும் மானியங்களை ஆராயுங்கள்.  பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகைகளைஆராய்வதன் மூலம் தொடங்கவும்.  பகுதி நேர வேலை வாய்ப்புகள்: படிக்கும் போது பகுதிநேர வேலை செய்வது நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மதிப்புமிக்க பணி அனுபவத்தைஅளிக்கும்.  வளாகத்திலோ அல்லது நெகிழ்வான அட்டவணையை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களிலோவேலை வாய்ப்புகளைத் தேடுங்கள்.  பிரான்சில் உள்ள மாணவர்களுக்கான பிரபலமான விருப்பங்களில்Training, விருந்தோம்பல், சில்லறை விற்பனை அல்லது Freelance வேலை ஆகியவை அடங்கும்.  உங்களின்பணிக் கடமைகள் உங்கள் கல்விச் செயல்திறனில் தலையிடாது என்பதை சரியாக உறுதி செய்து கொள்ளவும் மாணவர் கடன்கள்: உங்கள் கல்விச் செலவுகளை ஈடுகட்ட உதவித்தொகை மற்றும் பகுதி நேர வேலை போதுமானதாக இல்லைஎன்றால், மாணவர் கடன்கள் ஒரு சாத்தியமான விருப்பமாக இருக்கும்.  பிரான்சில், நிதி நிறுவனங்கள் மற்றும்அரசாங்க ஆதரவு அமைப்புகளால் வழங்கப்படும் கடன் திட்டங்களை ஆராயுங்கள்.  மாணவர் கடனைப்பெறுவதற்கு முன் விதிமுறைகள், வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திட்டங்களை கவனமாகமதிப்பிடுங்கள்.  உங்களுக்குத் தேவையானதை மட்டும் கடன் வாங்குவதில் கவனமாக இருங்கள் மற்றும்உங்கள் படிப்பை முடித்த பிறகு திருப்பிச் செலுத்துவதற்கான தெளிவான திட்டத்தை வைத்திருக்கவும். வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குதல்: படிக்கும் போது, ​​உங்கள் மாணவப் பருவத்தைத் தாண்டி உங்களுக்குப் பயனளிக்கும் நல்ல நிதிப்பழக்கங்களை வளர்த்துக் கொள்வது அவசியம்.  எதிர்பாராத செலவுகளைக் கையாள அவசர நிதியைஉருவாக்குவதன் மூலம் தொடங்கவும்.  மாணவர் சேமிப்புக் கணக்கைத் திறப்பதைக் கருத்தில் கொண்டு, அதில்தவறாமல் பங்களிக்கவும்.  வரிச் சலுகைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் Livret Jeune அல்லதுLivret A போன்ற மாணவர்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுங்கள்.  உங்கள் செலவுகளைக்கண்காணிப்பது, பணத்தைச் சேமிப்பது மற்றும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது போன்ற பழக்கத்தைவளர்த்துக் கொள்ளுங்கள். முடிவுரை: பிரான்சில் ஒரு மாணவராக நிதி சவால்களை வழிநடத்துவதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் செயல்திறன்மிக்க நிதி மேலாண்மை தேவை.  மாணவர் வாழ்க்கைக்கான பட்ஜெட், உதவித்தொகை மற்றும் மானியங்களைஆராய்வதன் மூலம், பகுதி நேர வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, மாணவர் கடன்களைப்புரிந்துகொள்வது மற்றும் வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம், உங்கள் கல்விப் பயணத்தின்போது நீங்கள் நிதி ஸ்திரத்தன்மையை அடைய முடியும்.  நிதி ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனையைப்பெறவும், உங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தவும், உங்கள் நிதிகளை பொறுப்புடன்நிர்வகிக்கும் போது உங்கள் கல்வி இலக்குகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கவும்.  புத்திசாலித்தனமானநிதித் திட்டமிடல் மூலம், உங்கள் மாணவர் ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமான எதிர்காலத்திற்கானஅடித்தளத்தை நீங்கள் அமைக்கலாம்.

பாரிஸ் உணவகத்தில் ஈழதமிழர் ரஞ்சனை அறுத்த முதலாளி!

பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து நடந்த,நடந்து கொண்டிருக்கின்ற கலவரங்களைஇன்டைக்கு பாரிஸில் பார்த்து கொண்டே வேலை செய்கிற உணவகத்துக்கு வந்த ரஞ்சனை முதலாளி வெறித்துபார்த்து கொண்டிருந்தார். வந்தவன் சட்டு புட்டென வழமையான தன் வேலையை பார்க்க தொடங்கிட்டான்..முதலாளி அப்பப்ப அவனைபார்த்து கொண்டேயிருந்தார்..காரணம் அன்று வேலைக்கு வந்த எல்லாரிட்டயும் கடந்த நாளில் நடந்த சூட்டுசம்பவத்தை பற்றி அலம்பி போட்டுதான் விட்டவர். அவன் மட்டும் எந்த ரியாக்சனும் இல்லாம அவன்பாடு தன் வேலை உண்டு என இருந்தது முதலாளி மனசைஉறுத்தியிருக்கு,கிட்ட போய் கதையை குடுத்தார்..சுத்தி ஒரே கலவரமா கிடக்கு.. இதுகள பற்றி என்னநினைக்கிறாய் என்று கேட்டார்.நீ ஒரு ரியாக்சனும் இல்லாம இருக்கியே என... ரஞ்சன் சொன்னன் உதுகள விட பெரிசு பெரிசா ஊர்லயே பாத்திட்டுதான் இங்க வந்தனாங்க... எதாச்சு பெரிசாசெய்யுங்க பிறகு கதைக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்! 

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img