பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்

Must Read

பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் விஸ்ஸான்ட் என்ற இடத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு புறப்படும் நோக்கில் குழந்தையின் பெற்றோரும் அவர்களது இரண்டு மூத்த மகன்களும் ஏறியபோது படகு ஏற்கனவே நிரம்பியிருந்தது.பிரித்தானியாவில் குடியேறும் கனவுடன் ஐரோப்பா வழியாக புறப்பட்டவர்கள் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த குடும்பம்.

பிறந்து வெறும் 40 நாட்களேயான(Maryam) குழந்தையை குப்பை சேகரிக்கும் பை ஒன்றால் சுற்றியிருந்தனர். படகு புறப்பட்டு 100 மீற்றர் கடந்திருக்கும், அப்போது கூட்ட நெரிசல் காரணமாக படகு தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.ஒருகட்டத்தில் படகு கவிழ்ந்துள்ளது. படகு தத்தளிக்கத் தொடங்கியதும் கரைக்கு திரும்ப பலர் கூறியுள்ளனர். ஆனால் படகோட்டி அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த களேபரத்தில் குழந்தை தமது கையில் இருந்து தவறியதாக அந்த தந்தை தெரிவித்துள்ளார். இதனிடையே, படகு கவிழ்ந்து மக்கள் தத்தளிப்பதை கவனித்த பிரெஞ்சு கடலோர காவல்படை பல கப்பல்களையும் ஹெலிகொப்டரையும் அனுப்பி 65 பேரை மீட்டனர்.

ஆனால் சிறுமி மரியம் தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கடும் துயரத்தை எதிர்கொண்டாலும், தமது இரு மகன்களையும் மனைவியையும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்க முயன்று வருவதாக அந்த ஈராக்கியர் தெரிவித்துள்ளார்

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This