பிரான்சில் பகுதி நேரமாக / முழுநேரமாக சுயதொழில்: தொடங்குவதற்கான வழிகாட்டி

Must Read

பிரான்சில் குறைந்த முதலீட்டில் சுயமாகத் தொழில் தொடங்க விரும்புகின்றீர்களா? பிரெஞ்சு அரசின் Auto-Entrepreneur (தற்போது Micro-entreprise) முறைமையானது, மிக எளிய வரி நடைமுறைகளுடன் சுயதொழில் தொடங்க சிறந்த வாய்ப்பளிக்கிறது. உணவக டெலிவரி, கைவினைத் தொழில், கணனிச் சேவைகள் மற்றும் ஆலோசனைத் தொழில்கள் வரை பல துறைகளில் இத்திட்டம் மூலம் தடம் பதிக்க முடியும். 

  1. தொழில் வாய்ப்புக்கள் (Secteurs d’activité)

சுயதொழில் முனைவோராகப் பின்வரும் முக்கிய துறைகளில் பதிவு செய்யலாம்.

  • சேவை மற்றும் டெலிவரித் துறை (Presentations de Service / Delivery): UberEats, Deliveroo போன்ற உணவு விநியோகம், மொழிபெயர்ப்பு, வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள்.
  • வர்த்தகத் துறை (Achat / Vente): பொருடக்களை வாங்கி விற்பனை செய்யும் வணிகம்.
  • கைவினைத் துறை (Artisanat): கட்டிட வேலைகள், மின்சாரப் பராமரிப்பு, அழகுக் கலை மற்றும் தையல் கலை. (குறிப்பு: சில கைவினைத் தொழில்களுக்குத் தகுந்த பட்டயச் சான்றிதழ் அவசியமாகும்.) 
  1. ஆன்லைனில் பதிவு செய்யும் படிமுறைகள் (Guichet Unique)

தற்போது அனைத்துச் சுயதொழில் பதிவுகளும் பிரெஞ்சு அரசின் INPI Guichet Unique இணையத்தளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

  1. கணக்குத் தொடங்குதல்: formalites.entreprises.gouv.fr  தளத்தில் கணக்குத் தொடங்கி உங்கள் தொழிலின் வகைப்பாட்டைத் (Activité) தேர்வு செய்யவும்.
  2. ஆவணங்கள் பதிவேற்றம்: கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் கார்டு (Carte de Séjour – தொழில் செய்ய அனுமதிப்பது) மற்றும் முகவரிச் சான்றை இணைக்க வேண்டும்.
  3. SIRET எண் பெறுதல்: பதிவு முடிந்த சில நாட்களில் INSEE அமைப்பிடம் இருந்து உங்களது தொழிலுக்கான 14 இலக்க SIRET எண் வழங்கப்படும்.
  4. வரி செலுத்தும் முறைகள் மற்றும் URSSAF பங்களிப்பு 

Auto-Entrepreneur அமைப்பின் மிகப்பெரிய சிறப்பு அம்சமே, “வருமானம் இல்லையென்றால் வரியும் இல்லை” என்பதாகும்.

  • URSSAF சமூகக் கட்டணம்: நீங்கள் ஈட்டும் மொத்த வருமானத்தில் (Chiffre d’Affaires) குறிப்பிட சதவீதம் (சேவைத் துறைக்குச் சுமார் 21.1% முதல் 21.2% வரை, வர்த்தகத் துறைக்குச் சுமார் 12.3%) மாதந்திரமாக அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை URSSAF அமைப்பிற்குச் செலுத்த வேண்டும்.
  • வருமான வரி (Versement Libératoire): விருப்பப்பட்டால்,வழக்கமான வரித் தாக்கலுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் 1% முதல் 2.2% வரை நேரடியாக வரியாகச் செலுத்தும் முறைமையையும் தேர்வு செய்யலாம்.

உங்கள் வழக்கமான வேலைக்கு இடையிலும் பகுதி நேரமாக இச்சுயதொழிலை சட்டபூர்வமாகச் செய்ய முடியும். 

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This