பிரான்சில் புதிய தொழில் தொடங்குதல்: ACRE, ARCE நிதியுதவிகள், தகுதிகள்

Must Read

பிரான்சில் வேலைவாய்ப்பு மையத்தில் (France Travail – பழைய Pôle Emploi) பதிவு செய்துள்ள நபர்கள் அல்லது வேலையில்லா உதவித் தொகை (ARE) பெறுபவர்கள் புதிய தொழில் தொடங்கும் போது,  அவர்களுக்குப் பிரெஞ்சு அரசாங்கம் நிதி மற்றும் வரிச் சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கிறது. அவற்றில் மிக முக்கியமான இரண்டு திட்டங்கள் ACRE மற்றும் ARCE ஆகும்.

  1. ACRE (Aide à la Création ou à la Reprise d’une Entreprise)

ACRE என்பது புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரிச் சலுகை (Exonération) ஆகும்.

  • சலுகை விபரம்: தொழில் தொடங்கிய முதல் ஆண்டில், நீங்கள் ஈட்டும் வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய URSSAF சமூகக் கட்டணங்களில் (Cotisations Sociales) 50% வரை விலக்கு அல்லது தள்ளுபடி பெற முடியும்.
  • யாரெல்லாம் தகுதியானவர்கள்: France Travail இல் பதிவு செய்த வேலையற்றோர், 18 முதல் 25 வயதிற்குட்பட இளைஞர்கள், RSA அல்லது ASS உதவித் தொகை பெறுபவர்கள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளில் (QPV) தொழில் தொடங்குபவர்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை: தொழில் தொடங்கிய 60 நாட்களுக்குள் URSSAF அமைப்பிற்கு ACRE விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.   
  1. ARCE (Aide à la Reprise ou à la Création d’Entreprise)

ARCE என்பது France Travail மூலம் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையில்லா உதவித் தொகையை (ARE) மாதாந்திரமாகப் பெறாமல், ஒரே முதலீட்டுத் தொகையாக  (Capital) மாற்றிக் கொடுக்கும் திட்டமாகும்.

  • நிதியுதவித் தொகை: உங்களுக்கு மீதமுள்ள மொத்த ARE உதவித் தொகையில் 60% தொகை ஒரே மூலதன நிதியாக உங்களது தொழில் தேவைக்காகக் கிடைக்கும்.
  • வழங்கப்படும் முறை: 
  1. முதல் 50% பங்கு: தொழில் தொடங்கியவுடன் (France Travail ஒப்புதலுக்குப் பின் வழங்கப்படும்)
  2. மீதி 50% பங்கு: தொழில் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்தி 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும்.
  • தகுதி நிபந்தனை: நீங்கள் ARE உதவித் தொகை பெறத் தகுதியுடையவராக இருக்க வேண்டும் மற்றும் ACRE சலுகைக்கான ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: ARCE திட்டத்தைத் தெரிவு செய்தால்,மாதாந்திர ARE உதவித் தொகை நிறுத்தப்படும்.அதற்குப் பதிலாக தொழில் தொடங்குவதற்கான உடனடி மூலதன நிதி (Capital) கிடைக்கும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்;

🏠 CityTamil முகப்புக்கு செல்ல அழுத்துங்கள்
🪷 ✨ 🪷
அழகிய புடவைகள்
✦ ─── ❖ ─── ✦
பெண்கள் ஆடைகள்
✨ அழகு · தரம் · சிறந்த விலை
🌍 உலகம் முழுவதும் டெலிவரி
👗 புடவைகள் பார்க்க →

Latest News

பிரான்ஸில் தொடரும் வன்முறை: பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல் – பிரதமர்

வார இறுதியில் பிரான்சின் பல நகரங்களில் வன்முறை மற்றும் குழப்பமான...

யாழில் லொறியில் பவுடர் கடத்தி இரண்டு மாடி சொகுசு வீடு கட்டிய 32 வயது இளைஞர்! நேர்ந்த கதி!

சிறிலங்கா அரசின் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் விசாரணை பிரிவினரால் யாழில்...

பிரான்சில் போராட்டம் தீவிரம்: பாடசாலைகள் மூடல்; இணங்கிய அரசு!

(பாரிஸ், 02.10.2026) - பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை...
✦ ✧ ✦
☾
உங்கள் எதிர்காலத்தை அறியுங்கள்
சோதிடம் · ஜாதகம் · திருமண பொருத்தம்
சிறந்த ஆலோசனைகள் · உலகம் முழுவதும் சேவை
♈ ♉ ♊ ♋ ♌ ♍
🔮 தொடர்பு கொள்ளுங்கள் →
TAMIL BOOKSTORE
1000+ BOOKS TO DISCOVER
STORIES
LITERATURE
தமிழ்
KNOWLEDGE
ஒரு புத்தகம். ஒரு புதிய உலகம்.
1000+ தமிழ் புத்தகங்கள்
🌍 உலகம் முழுவதும் விநியோகம்
EXPLORE →

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🇫🇷 ▶️ 📺
பிரான்ஸ் குடியுரிமை · பயனுள்ள தகவல்கள்
எமது யூடியூப் சேனலைப் பார்க்க அழுத்துங்கள்
யூடியூப் பார்க்க — Watch Now

More Articles Like This