Home Blog Page 69

பிரான்ஸ்: அத்தியாவசியப் பொருட்கள் விலை மாற்றம்!

0

உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட உயர் இறக்குமதி வரிகளுக்கு பதிலளிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) எதிர்மறையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல முக்கிய பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட உள்ளன.

புதிய வரி திட்டத்தின்படி, ஏப்ரல் 15 முதல் ஆரஞ்சு சாறு, காய்கறிகள், பாதாம், சோளம், அரிசி மற்றும் பழச்சாறுகள் போன்ற பொருட்களுக்கு உயர் வரி விதிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, மே 16 ஆம் தேதி முதல் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, சோயாபீன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கும் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் நிலையில், மற்றொரு தொகுப்புக்கு 25% வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரிவிதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் சிக்கலாக்கும் என்றும், உலக சந்தைகளில் புதிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உணவுப் பொருட்கள், எண்ணெய் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலை உயர்வு ஒரு சர்வதேச அளவிலான சவாலாக உருவாகலாம்.

மேலும், இது போன்ற வரி நடவடிக்கைகள் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்பையும் தீவிரமாக்கும் வாய்ப்பு இருப்பதால், வர்த்தக சமநிலைக்கு முக்கியமான நாடுகள் அனைத்தும் இதைப் பொறுப்புடன் அணுகவேண்டும் எனவும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிரான்ஸ்: பரிஸிலிருந்து லண்டனுக்கு தொடருந்து….. புதிய முயற்சி!

0

பரிஸில் இருந்து லண்டனுக்கான புதிய அதிவேக தொடருந்து சேவை Ferrovie dello Stato புதிய முயற்சி
பரிஸ்(Paris) மற்றும் லண்டன் (London) நகரங்களை இணைக்கும் ஒரு புதிய அதிவேக தொடருந்து சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இத்தாலியில் தேசிய ரயில்வே சேவைகள் வழங்கும் நிறுவனம் Ferrovie dello Stato Italiane (FS), இந்த சேவையை வழங்கும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டம் 2029ஆம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையை உருவாக்கும் நோக்கில் Ferrovie dello Stato நிறுவனம் பல பில்லியன் யூரோக்களை முதலீடு செய்து வருகிறது. இத்தாலி மற்றும் பிரான்ஸு இடையே ஏற்கனவே இயங்கும் Frecciarossa அதிவேக தொடருந்து சேவையை போலவே, இந்த சேவையும் பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சேவை Eurotunnel அல்லது Channel Tunnel எனப்படும் “le tunnel sous la Manche” வழியாக இயக்கப்படும். இத்துணை வழியாக ஏற்கனவே சேவைகளை இயக்கும் நிறுவனங்கள்:
👉Eurostar
👉Getlink (Eurotunnel Freight)
👉Le Shuttle (வாகனங்களுக்கான சேவை)
👉Evolyn

இவற்றில் Evolyn ஒரு புதிய போட்டியாளராக 2025 ஆம் ஆண்டுக்குள் சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இப்போது FS நிறுவனமும் Evolyn-இன் கூட்டாளியாக இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இரு நிறுவனங்களும் சேர்ந்து புதிய சேவையை செயல்படுத்தவுள்ளன.

இந்த கூட்டிணைப்பு மூலம், பரிஸ்-லண்டன் இடையிலான தொடருந்து போட்டியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணிகள் அதிக விருப்பங்களை கொண்டிருப்பதோடு, விலை மற்றும் சேவை தரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

முக்கிய அம்சங்கள்:
👉சேவை ஆரம்பம்: 2029
👉இயக்குநர் நிறுவனம்: Ferrovie dello Stato Italiane
👉கூட்டாளர்: Evolyn
👉பாதை: Channel Tunnel வழியாக
👉சேவை வகை: அதிவேக தொடருந்து (High-Speed Rail)
👉எதிர்பார்ப்பு: Eurostar-க்கு மாற்றாகவும், போட்டியாகவும்

இந்த திட்டம் நடைமுறைப்படும்போது, அது யூரோப்பிய நாடுகளில் இரு பெரும் நகரங்களை இணைக்கும் மேலும் ஒரு உயர் தரமான பயணத் தெரிவாக அமையும் என்பது உறுதி.

பிரான்ஸ்: ஐபோன் விலையில் மாற்றம்! மக்களின் கொள்வனவு நடத்தை மீதான தாக்கம்…

0

உலக வணிக போர் மற்றும் அதன் தாக்கங்கள்
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வணிக போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையிலான அரசாங்கம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி உயர்த்தியதன் பின்னர், இதற்கு பழிவாங்கும் நோக்கில் சீனாவிற்கான சுங்க வரிகள் 50% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு வரி உயர்வடைகிறது.

ஐபோன்கள் – உற்பத்தி மற்றும் விநியோகப் பின்னணி
பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. வரி உயர்வுகள் நேரடியாக உற்பத்திச் செலவையும், இறக்குமதி செலவையும் உயர்த்துவதால், ஐபோன்களின் விலை ஏறக்குறைய 10%–15% வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் ஒரு ஐபோனின் விலை $3,500 வரை செல்லும் அபாயம் இருப்பதால், ஆப்பிள் தற்போது தயாரிப்பு தளங்களை விரிவுபடுத்த முடியாமல் சிக்கலில் உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக நடைமுறைக்கு வருவது போல் பிரான்சில் ஐபோன்களின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த இறக்குமதி வரி அதிகரிப்பை அடுத்து, ஆப்பிப் நிறுவனத்தின் பங்குகள் 19% சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் தற்போதைய ஐபோன் விலைகள் (2025 ஏப்ரல் நிலவரம்)

மாடல்விலை (ஈ.சி.ஐ)வரம்பு (அனுமானம்)
iPhone 15€969€999–€1,099
iPhone 15 Plus€1,119€1,149–€1,249
iPhone 15 Pro€1,229€1,299–€1,399
iPhone 15 Pro Max€1,479€1,599–€1,699

விலை உயர்வால் ஏற்படும் கொள்வனவு மாற்றங்கள்

  1. மக்கள் நடத்தை மாற்றங்கள்:
    👉விலை அதிகரிப்பு நடுத்தர வருமானக்காரர்கள் பழைய மொடல்களை கொள்வனவு செய்வதற்கு வழி வகுக்கலாம்.
    👉சேகண்ட் ஹேண்ட் சந்தையின் வளர்ச்சி (ex: Back Market போன்ற தளங்கள் மக்களின் கொள்வனவைத் தீர்மானிப்பதில் அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடும்).
    👉அல்டர்னேட்டிவ் பிராண்டுகளான (Samsung, Xiaomi, Oppo) போன்றவற்றிற்கான கேள்வி அதிகரிக்கலாம்.
  2. இணைய சேவைகள் மீது பொறுப்பு:
    👉மக்கள் iPhone வாங்காமல் iOS சேவைகளை iPad அல்லது Mac மூலம் தொடரலாம்.
    👉இன்ஸ்டால் மெண்ட் திட்டங்கள் மற்றும் காரிய வாடகை முறைகள் (leasing) அதிகம் தேடப்படும்.
  3. விற்பனை அளவுகள் மீது தாக்கம்:
    👉2024-இல் ஐபோன் விற்பனை பிரான்சில் ஏறத்தாழ 12% குறைவடிந்தது.
    👉2025-இல் இது 15% வரை குறையலாம் என IDC ஆய்வகம் கணிக்கிறது.

ஆப்பிளின் எதிர்கால முயற்சிகள்
👉இந்தியாவில் உற்பத்தி சாத்தியத்தை விரைவுபடுத்த முயற்சிகள்.
👉புதிய அல்லது மாற்று சந்தைகளில் அதிக கவனம்: இந்தியா, வியட்நாம், ஐர்லாந்து.
👉ஈயூரோப்பில் மீள்நிறுவல் திட்டங்கள் (recycling, trade-in offers) அதிகரிக்கப்படும்.

விலை உயர்வு என்பது பரவலான பன்னாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களின் பிரதிபலிப்பாகும். பிரான்சில் மட்டும் அல்லாமல், ஐரோப்பா முழுவதும் iPhone விற்பனை ஒரு பரிசீலனைக்குரிய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் மேலான சிந்தனையுடன் மாற்று தேர்வுகளுக்கு நகர, ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி மற்றும் விற்பனைத் திட்டங்களில் நுண்ணறிவு கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது.

பிரான்ஸ்: முக்கிய நகரங்களில் மாசுக்கட்டுப்பாடு! பழைய வாகனங்கள் தொடர்பில் அரசின் முடிவு!

0

பிரான்ஸின் முக்கிய நகரங்களில் வாகன மாசுக்கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள “Crit’Air” வில்லைகள் தற்போது புதிய அரசியல் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த வில்லைகள் ஒவ்வொரு வாகனமும் சூழலுக்கு எவ்வளவு மாசு ஏற்படுத்தும் என்ற அளவைப் பொருத்து தரநிலைகளை வகுத்து, அந்த அடிப்படையில் நகரப்பகுதிகளில் வாகன நுழைவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.

இதனால், குறிப்பாக பழைய மோட்டார் வாகனங்களை வைத்திருக்கும் மக்கள் பெருநகரங்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இது, வேலை, கல்வி, சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே தடையாக உருவாகி இருப்பதைக் கவனித்த மரின் லூப்பனின் தேசிய பேரணிக் கட்சி (Rassemblement National – RN), Crit’Air வில்லைகளை முழுமையாக ரத்து செய்யும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தது.

இந்த கோரிக்கைக்கு தற்போது பல எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது. அதன் விளைவாக, இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8, 2025), பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இந்தக் கோரிக்கை தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற இருக்கின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் மக்ரோன் தலைமையிலான Renaissance கட்சி இது ஒரு பின்னடைவாக அமையும் எனக்கூறுகிறது. மாசு கட்டுப்பாடுகளை நீக்குவது, உயர் மாசுத்தன்மை காரணமாக ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் எச்சரிக்கிறது.

இதனை மேலும் கடுமையாக்கும் வகையில், இன்று பரிசின் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, அதன் காரணமாக வெளியான நச்சுத் தன்மை, மற்றும் அந்த வாயுக்கள் மூலமாக மக்கள் அனுபவிக்கும் மூச்சுத் திணறல்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டின் ஆபத்துகளை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.

இந்நிலையில், வாகன உரிமையாளர்களின் உரிமைகள், சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, மற்றும் அரசியல் நிலைமைகள் ஆகிய அனைத்தும் ஒன்றாக மோதும் நிலையில், Crit’Air வில்லைகளின் எதிர்காலம் இன்று நடைபெறும் வாக்கெடுப்பின் முடிவைப் பொறுத்திருக்கும்.

பிரான்ஸ்: குழந்தைகளின் நலன் முக்கியம்! அரசின் புதிய திட்டங்கள்!

0

குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த பிரான்ஸ் அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகள் – புதிய திட்டங்களை அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் அறிவிப்பு!
பாரீஸ், ஏப்ரல் 8, 2025:
பிரான்சில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 2025 இற்குள் செயல்படுத்தப்படும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை Libération நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வௌட்ரின் கூறியபடி, இவரது திட்டங்களில் முக்கியமானது, பெற்றோர் வேலைவாய்ப்புகளைத் தவிர்க்காமல் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள். இதன் மூலம் குடும்பங்கள் மீது இருக்கும் மன அழுத்தத்தை குறைத்து, குழந்தைகளுக்கு உறுதியான வளர்ச்சி சூழலை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார்.

அத்துடன் ASE (l’aide sociale à l’enfance) எனப்படும் சமூக குழந்தைகள் நல சேவையில் சேரும் ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை முழுமையாக மதிப்பீடு செய்யும் திட்டத்தை அமைச்சகம் தீவிரமாக அமல்படுத்த உள்ளது. இத்தகைய மதிப்பீடு ஏற்கனவே சட்டப்பூர்வமாக இருந்தாலும், அது ஒழுங்காக நடைமுறையில் வராதது பற்றி அவர் கவலை தெரிவித்தார்.

இல்-து-பிரான்ஸ் மற்றும் ஹாட்ஸ்-து-பிரான்ஸ் ஆகிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு ஆதரவு மையங்கள், இதற்கான முன்னோடியாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குழந்தைகள் ASE மூலம் பராமரிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன், உளவியல் மற்றும் உடலியல் நிலைமைகள் விரிவாக பரிசோதிக்கப்படும் என அமைச்சர் உறுதிமொழி அளித்துள்ளார்.

மேலும், பிரச்சனைகளில் உள்ள குழந்தைகளுக்காக 25 புதிய மருத்துவ வரவேற்பு அலகுகள் (unités d’accueil pédiatriques) உருவாக்கப்பட உள்ளது. இது அவசர சூழ்நிலைகளில் சிறுவர்களுக்கு விரைந்து மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் செயல்படும்.

2026ம் ஆண்டு முதல், பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்காக “ஒருங்கிணைந்த பராமரிப்பு பாதைகள்” எனப்படும் புதிய முறைமை இயல்பாக அமல்படுத்தப்படும். இதில், பல்வேறு அமைப்புகள் மத்தியிலான தகவல் பரிமாற்றம் மேம்படுத்தப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் இடையூறு இல்லாத, தொடர்ச்சியான பராமரிப்பு திட்டம் உறுதி செய்யப்படும்.

வளங்களின் பற்றாக்குறை மற்றும் பணியாளர்களின் தட்டுப்பாடு போன்ற சவால்கள் நிலவினும், அமைச்சர் எந்தவொரு நிதி விவரங்களையும் தற்போதைக்கு வெளியிடவில்லை. இருப்பினும், ஏப்ரல் மாத இறுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் சந்திப்பு ஒன்றை அவர் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு:
பிரான்ஸ் முழுவதும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றும் பல சமூக அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் வெறும் அறிவிப்பாக மட்டுமின்றி, நடைமுறையில் பலனளிக்க வேண்டும் எனக் கோருகின்றன. “ஒருங்கிணைந்த பராமரிப்பு”, “தகுந்த நிதி ஒதுக்கீடு”, மற்றும் “வல்லுநர் பணியாளர்களின் பயிற்சி” ஆகியவை இத்திட்டத்தின் வெற்றிக்கான முக்கியக் தேவைகளாக இருக்கும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிரான்ஸ்: போலி பயணச்சீட்டு பரிசோதகர் – மெட்ரோ பயணிகள் கவனம்!

0

லியோன் நகரத்தில் போலி பரிசோதகர் நடவடிக்கை:
பிரான்ஸின் லியோன் நகர மெட்ரோவின் B அணியில் உள்ள Saxe-Gambetta நிலையத்தில், கடந்த மார்ச் 26ஆம் தேதி, ஒரு போலி பயணச்சீட்டுப் பரிசோதகர் (Fake Ticket Inspector) பயணிகளிடம் பயணச்சீட்டுகளை பரிசோதிப்பதுபோன்று நடித்து, பலரிடம் தண்டப்பணம் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளார்.

இந்தச் சம்பவம், அந்த பகுதி பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிலர் அதிகாரபூர்வ புகார்களைச் செய்ததைத் தொடர்ந்து, லியோன் நகர மெட்ரோ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பல எச்சரிக்கை அறிவிப்புகளை மெட்ரோ நிலையங்கள் மற்றும் தொடர்ச்சியான ஒலிப்பாதையில் (public announcement system) வெளியிட்டு வருகின்றது.

பாதுகாப்பு வழிமுறைகள்:
➡️பணிபுரியும் உண்மையான பரிசோதகர் ஒருவரும் தனியாக செயல்பட முடியாது. எப்போதும் அவர்கள் குறைந்தது இரண்டு பேர் குழுவாகவே செயல்படுகிறார்கள்.
➡️அவர்கள் உடையில் மெட்ரோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ அடையாள அட்டையும் (badge) மற்றும் அணிகலன்களும் இருக்கும்.
➡️தனியாக நடமாடும் பரிசோதகர் ஒருவர் பயணச்சீட்டை பார்க்க கேட்பாரானால், எச்சரிக்கையாக இருங்கள் – அவருக்கு காட்ட வேண்டாம்.
➡️உடனடியாக மெட்ரோ நிலைய ஊழியரிடம் அல்லது பாதுகாப்புத் துறையினரிடம் தகவல் அளிக்கவும்.

மற்ற நகரங்களிலும் கவனம் தேவை:
போலி பரிசோதகர் சம்பவம் லியோனில் இடம்பெற்றாலும், இது பாரிஸ் உள்ளிட்ட மற்ற பெரிய நகரங்களிலும் நடைபெற வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மெட்ரோ பயணிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இணையத்தில் பரவும் போலி டிக்கெட் விற்பனை:
இதேபோன்று, சமீபத்தில் போலி ரயில் டிக்கெட் ஒன்லைன் விற்பனை தொடர்பாகவும், சில பயணிகள் மோசடிக்குள்ளான சம்பவங்கள் பதிவாகியுள்ளது. எனவே, ஒன்லைனில் டிக்கெட் வாங்கும் போது, அதிகாரபூர்வ வலைத்தளங்களையும் செயலிகளையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பயணச்சீட்டுப் பரிசோதனை என்பது பாதுகாப்புக்கான ஒரு நடவடிக்கைதான். ஆனால் அதையே ஏமாற்றுக் குற்றவாளிகள் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனித்து, நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். யாரும் நேரில் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை – சந்தேகத்திடமான சூழ்நிலைகள் நேர்ந்தால், உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பரிஸ்: காற்றில் நச்சுத்தன்மை அபாயம்! நிபுணர்கள் எச்சரிக்கை!

0

பரிஸ் கழிவு அகற்றும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காற்றில் நச்சுத்தன்மை கலந்ததா என்ற சந்தேகம் ஈரப்பட்டுள்ளதாக
பரிஸ், ஏப்ரல் 7, 2025 – பரிஸ் நகரின் 17 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள முக்கியமான கழிவு அகற்றும் நிலையம் நேற்று பிற்பகலில் தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த நிலையத்தில் மருத்துவ கழிவுகள், கெமிக்கல்கள் உள்ளிட்ட பலவகைத் தீவிர கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதால், தீப்பற்றிய பிறகு காற்றில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்படும் போது தூண்டிய பெரும் புகைமூட்டம் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் தென்பட்டது. இந்த புகைமூட்டம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். தீ பரவல் பெரிதாக இருந்தாலும், இதில் யாரும் காயமடையவில்லை என்பது நம்மை சிறிது நிம்மதிப்படுத்தும் செய்தி.

அதே நேரத்தில், நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் காற்றில் கலந்து பரவியிருக்கலாம் என்ற நிபுணர்களின் கருத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த வகை வாயுக்கள் மூலமாக சுவாசப் பாதிப்பு, தலைவலி, வாந்தி போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பரிஸ் காவல்துறை தலைமையதிகாரி லாரண்ட் நுணெஸ் (Laurent Nuñez) நேற்று இரவு அளித்த செய்தியில், காற்றில் தற்போதைக்கு எந்தவிதமான நச்சுத்தன்மையும் காணப்படவில்லை என உறுதி செய்தார். இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுப்புற காற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்கள்:
➡️சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
➡️அருகிலுள்ள பகுதிகளில் தற்காலிகமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
➡️சுற்றுப்புற சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வுகள் தொடருகின்றன.

இவ்வாறான கழிவு அகற்றும் நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தப்படுகின்றது.

கனடா: வேலை வாய்ப்பு 2025; சராசரி சம்பளமும் தேவையான திறன்களும்!

வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தர உயர்வு, இயற்கையுடன் ஒன்றிணைந்ததாகத் தோன்றும் வாழ்கை முறை ஆகிய காரணங்களால் கனடா, வேலை தேடுவோருக்கும் குடியேற விரும்புவோருக்கும் மிகவும் விருப்பமான நாடாக உள்ளது. வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகியவையும் இதற்கு மேலுமொரு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

வேலைவாய்ப்புகளும், தேவையான திறன்களும்
கனடாவில் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் குறிப்பிட்ட திறன்கள் மற்றும் தகுதிகளைப் பொருத்தே கிடைக்கின்றன. எனவே, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப உங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம். இந்தியர்களுக்கு கனடாவில் மென்பொருள், மேலாண்மை மற்றும் சுகாதார துறைகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

PR (Permanent Residency) பெறும் முக்கிய வழிகள்:
👉எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் (Express Entry)
👉மாகாண நியமனத் திட்டம் (PNP)
👉கியூபெக் திறமையான தொழிலாளர் திட்டம் (QSWP)

கனடாவின் நிரந்தர வதிவிட அந்தஸ்து (PR) பெற்றால், நாடு முழுவதும் படிக்கவும் வேலை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். இலவச சுகாதாரம், இலவச கல்வி, மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் பயன்களும் உண்டு.
வேலைவாய்ப்பு உள்ள முக்கிய துறைகள்:
👉மென்பொருள் பொறியியல்
👉செவிலியர்கள் (Nurses)
👉பல் மருத்துவர்கள்
👉பட்டயக் கணக்காளர்கள்
👉சட்டத்தரணிகள்
👉ஆசிரியர்கள்
👉கட்டிடக்கலை நிபுணர்கள்
👉கட்டுமானத் தொழிலாளர்கள்
👉ஹோட்டல் மேலாளர்கள்

சம்பள விவரங்கள் (வருடத்திற்கு சராசரி):
➡️மென்பொருள் பொறியாளர்கள்: $90,000 – $130,000 (அனுபவம் உயர் நிலையில் $150,000 வரை)
➡️செவிலியர்கள்: $60,000 – $90,000
➡️பல் மருத்துவர்கள்: $30,000 – $350,000 (அனுபவம் மற்றும் மாகாணத்தைப் பொறுத்து)
➡️ஆசிரியர்கள்: $36,000 – $72,000
➡️மருத்துவர்கள்: $209,236
➡️அறுவை நிபுணர்கள்: $264,656
➡️சுகாதார ஊழியர்கள்: $77,080
➡️ஹோட்டல் மேலாளர்கள்: $45,000 – $66,000
(விக்டோரியா, கால்கரி, ரொறன்ரோ ஆகிய நகரங்களில் அதிக சம்பளம்)

கனடாவில் வேலைக்கு ஏற்ற முக்கிய திறன்கள்:
➡️தொழில்நுட்ப மேலாண்மை (Technology Management)
➡️தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு திறன் (Communication & Interpersonal)
➡️பிரச்சனை தீர்க்கும் திறன் (Problem Solving)
➡️புதுமை மற்றும் சிந்தனை திறன் (Creativity & Innovation)
➡️திட்ட மேலாண்மை (Project Management)
➡️விற்பனை மற்றும் வணிக வளர்ச்சி (Sales & Business Development)
➡️நிதி பகுப்பாய்வு மற்றும் ஆபத்து மேலாண்மை (Financial Analysis)
➡️வாடிக்கையாளர் சேவை (Customer Service)
➡️டிஜிட்டல் திறன் மற்றும் விரிவாக்கம் (Digital Literacy)
➡️குழுவுடன் பணியாற்றும் திறன் (Teamwork & Leadership)
➡️இருமொழி அல்லது பன்மொழி திறன் (Multilingual Proficiency)
➡️நேர மேலாண்மை (Time Management)
➡️உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence)

கனடா, திறமைமிக்க நபர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் நாடாக விளங்குகிறது. சரியான தகுதிகளுடன், வேலை அனுபவத்துடன், மற்றும் திறன்கள் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருந்தால் கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் நிரந்தர குடியேற்றம் என்பது எளிமையானது. திட்டமிட்டு செயல்பட்டால் கனடாவில் உங்களுக்கென ஒரு உறுதியான எதிர்காலம் உருவாக்கலாம்.

பிரிட்டன்: புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்! பெருந்தலைவர்கள் மீது விசாரணை!

0

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ‘Manston ஊழல்’ வழக்கில் ரிஷி சுனக் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் விசாரணைக்குட்பட வாய்ப்பு
இங்கிலாந்தின் மான்ஸ்டன் (Manston) பகுதியில் இடம்பெற்ற புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தற்போது ‘Manston ஊழல்’ என குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், முன்னாள் உள்துறைச் செயலர்கள் பிரீத்தி பட்டேல், கிரான்ட் ஷாப்ஸ், சுவெல்லா பிரேவர்மேன், பாதுகாப்புச் செயலராக இருந்த பென் வாலேஸ் உள்ளிட்ட பலர் விசாரணைக்குட்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரிதாபகரமான புகலிடக்கோரிக்கை மைய சூழ்நிலை
Manston-ல் அமைந்துள்ள தற்காலிக தங்குமிட வசதிகள் சுமார் 1,600 பேர் தங்கும் அளவிற்கு மட்டுமே இருந்தன. இருப்பினும், கடந்த ஆண்டுகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு நெரிசலால், சுமார் 4,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் அங்கு அடைத்துவைக்கப்பட்டனர்.

இதனால் அங்கு தங்கியிருந்தோருக்கு போதிய சுகாதார வசதிகள் இல்லை; உணவு, தண்ணீர், மருத்துவ பராமரிப்பு ஆகியவையும் சீராக வழங்கப்படவில்லை. இதன் விளைவாக டிப்தீரியா, ஸ்கேபிஸ் போன்ற தொற்றுகள் பரவின.

2022ம் ஆண்டு, ஈராக் நாட்டைச் சேர்ந்த 31 வயதான ஹுசைன் ஹசீப் அஹமது, டிப்தீரியா தொற்றால் Manston மையத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அகதிகளின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசின் தவறுகள் குறித்து பெருமளவிலான விசாரணைகள் ஆரம்பமானன.

புலம்பெயர்ந்தோர் சட்டப்படி தற்காலிக வசதிகளில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் மட்டுமே வைக்கப்பட வேண்டும். ஆனால் சிலர் வாரக்கணக்கில் அங்கு தங்க வைக்கப்பட்டனர் என சாட்சியங்கள் கூறுகின்றன. இது மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு நேரடி மீறலாகக் கருதப்படுகிறது.

முன்னாள் தலைவர்கள் விசாரணைச் சுழற்சிக்குள்
இந்த விடயம் தற்போது சட்டபூர்வ விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், முறையான நிர்வாகக் கண்காணிப்பின்மை மற்றும் பாதுகாப்பு அலட்சியம் காரணமாக முன்னாள் அரசியல் தலைவர்கள் குற்றவாளிகளாகக் கண்காணிக்கப்படலாம். விசாரணையின் ஒரு கட்டமாக, அதிகாரிகள் சாட்சியங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் பெருந்தொலைவிலான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. மனித உரிமை அமைப்புகள், சட்டவிரோத நெரிசலைவிட தீர்வு காண கோருகின்றன. லேபர் மற்றும் லிபரல் டெமோக்ராட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விசாரணையை எளிதில் மூடக்கூடாது என்றும், முழுமையான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

இவ்வழக்கின் தீர்வு, பிரிட்டனில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் மற்றும் அரசின் பொறுப்புகள் குறித்த எதிர்கால போக்கை வகுப்பதில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!

0

உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5 முதல் 6 சதவிகிதம் வரை குறைவு ஏற்படலாம்” என கூறியுள்ளார். இது நுகர்வோருக்கு தற்காலிகமாக ஒரு நல்ல விடயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை $74 டொலர்களில் இருந்து $63 டொலர்களாக, சுமார் 15 சதவிகிதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் மிகக் குறைந்த விலை என குறிப்பிடப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியின் முக்கிய காரணிகளில் ஒன்றாக, சர்வதேச அளவில் எண்ணையின் தேவை குறைவடைந்தமை, மற்றும் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான OPEC+ நாடுகள் சில உற்பத்தியை அதிகரித்திருக்கலாம் என்பதும் கூறப்படுகிறது.

பிரான்சில் எரிபொருள் விலைகள் குறைவதால், பொதுமக்கள் மட்டும் அல்லாமல் தொழில்துறைகளும் நன்மை பெறலாம். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகள் இதில் நேரடி லாபம் காணும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எரிபொருள் விலைகள் இவ்வாறு குறைவது சில மாதங்கள் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், சந்தை நிலைமை தொடர்ந்து மாறக்கூடியதென்பதால், இதனை ஒரு நிரந்தர மாற்றமாக கருத முடியாது என்றும், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.