சொந்த செலவில் சூனியம் வைத்த அமெரிக்கா! கரி வேலை பார்த்த ஈரான்!

Must Read

ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதே அமெரிக்காதான் .இன்று கொடுத்ததை அழிப்பதற்கான போர் !

ஈரானுக்கு அணுசக்தி செறிவூட்டலுக்கான அனைத்து தொழில் நுட்பங்களையும் வழங்கியது அமெரிக்காதான். அறுபதுகளிலேயே அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகள் ஈரானில் தங்கியிருந்து அணு உலைகளை நிறுவுவதற்கான அனைத்து தொழில் நுட்பங்களையும் வழங்கினார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் அமைதிக்கான அணுத் திட்டம் (ATOM FOR PEACE )என்பதாகும். தெஹ்ரானில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பல ஆண்டுகளாக அமெரிக்க விஞ்ஞானிகள் அங்கேயே தங்கியிருந்து ஈரானுக்கு தமது தொழில் நுட்பங்களை செயற்படுத்தி வந்தனர்.

அந்த காலங்களில் ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. மேற்கத்தைய கலாசாரம் போன்றுதான் ஈரான் இருந்தது. பெர்சியர்களில் ஒரு பகுதியினர் ஆங்காங்கே சூரிய வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். ஏனைய ஷியா முஸ்லிம்கள் அவர்களின் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு மன்னர் ஆட்சியின் கீழ் சமாதானமாகத்தான் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் அமெரிக்கா ஈரானின் அரசியலும் கலாசாரமும் ஒருநாள் தலைகீழாக மாறும் என்று கற்பனை செய்தும் பார்த்திருக்கமாட்டார்கள்.

படிப்படியாக ஈரானின் அரசியலுக்குள் எழுபதுகளில் அயதுல்லா ருவெல்லா கொய்மெனியின் பிரசாரம் கிராமங்கள் தோறும் வலுப்பெற்றுக்கொண்டு வந்தது. இஸ்லாமிய புரட்சிக்கு அவர் வித்திட்டார் அதன் தொடர்ச்சியாக எழுபதுகளின் இறுதியில் ஈரான் முற்றுமுழுதுமாக இஸ்லாமிய புரட்சிப்படையின் கீழ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அமெரிக்காவின் தூதரகம் ஈரான் புரட்சிப்படை மாணவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.சுமார் 444 நாட்கள் அமெரிக்க அதிகாரிகள் உட்பட தூதுரக ஊழியர்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்க அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கார்ட்டர் மிகவும் அவதிப்பட்டார்.

இங்கே சொல்ல வந்தது ஈரானும் அமெரிக்காவும் ஒரு காலத்தில் மிகவும் நட்புறவுடன் இருந்த நாடுகள்தான். ருவெல்லா கொய்மெனி ஈரானை கைப்பற்றிய பின்னர்தான் அமெரிக்கா கொடுத்த அணு தொழில் நுட்பம் இப்போது செறிவூட்டப்பட்ட நிலையில் இருக்கக்கூடும் என்று அமெரிக்காவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிடம் அணுகுண்டு இருக்குமானால் அது இஸ்ரேலுக்கு மிக ஆபத்தானது என்பதை இஸ்ரேலும் அமெரிக்காவும் உணர்ந்துகொண்டன. இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணுவாயுதங்கள் இருக்கின்றபோதும் அதை பாவிக்க வேண்டிய தேவையேற்பட்டால் இஸ்ரேலிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும். ஆனால் ஈரானிடம் அப்படியல்ல தனிநபர் எடுக்கும் முடிவுடன் சம்பந்தப்பட்டது. இதற்காகத்தான் இன்றைய யுத்தம் மறுபுறம் எண்ணை வியாபாரம் .

இதே அமெரிக்காதான் பாகிஸ்தானுக்கு அணுவாயுதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் வழங்கியது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்ட...
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More Articles Like This

- Advertisement -spot_img