பிரான்ஸ் உணவகங்களில் கிடைக்கும் டிப்ஸ் (Tips) பணத்திற்கு வரி: புதிய சட்ட விதிகள் 

Must Read

பிரான்சில் உணவகங்கள் (Restaurants), கஃபேக்கள் (Cafés) மற்றும் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ் (Pourboires) தொகையானது அவர்களின் கூடுதல் வருமானமாக அமைகிறது. பிரெஞ்சு அரசாங்கம்  உணவகத் துறையை ஊக்குவிக்கவும், ஊழியர்களின் வாங்கும் திறனை உயர்த்தவும் டிப்ஸ் பணத்திற்கான சிறப்பு வரி விலக்குகளை (Exonération) அமுல்படுத்தியுள்ளது.

  1. டிப்ஸ் பணத்திற்கான வரி மற்றும் சமூகப் பங்களிப்பு விலக்குகள் (Exonération)

பிரெஞ்சு சட்டத் திருத்தங்களின்படி, உணவக ஊழியர்கள் பெறும் டிப்ஸ் தொகைகளுக்கு வருமான வரி (Impôt sur le revenu) மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புக் கட்டணங்கள் (Cotisations sociales) ஆகியவற்றிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது:

  • வழங்கப்படும் தொகை: வாடிக்கையாளர்கள் ரொக்கமாக (Espéces) வழங்கினாலும் அல்லது வாங்கி அட்டை (Carte Bancaire / CB) மூலம் டிப்ஸ் தொகையைச் செலுத்தினாலும் இந்த வரி விலக்கு பொருந்தும்.
  • இலாபம்: இதனால், ஊழியர்களுக்குக் கிடைக்கும் டிப்ஸ் தொகையில் எந்தப் பிடித்தமும் இன்றி 100% முழுத் தொகையும் அவர்களுக்கே சென்று சேரும்.  
  1. வரி விலக்குப் பெறத் தேவையான நிபந்தனைகள் (Conditions)

இந்தச் சலுகையைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • வருமான வரம்பு: ஊழியரின் மாதாந்திர ஊதியம், பிரான்சின் குறைந்தபட்ச ஊதியமாக SMIC இன் 1.6 மடங்கு தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது. (சுமார் €2,800 Gross க்கு உட்பட்ட ஊதியம்) 
  • கூடுதல் தொகையாக இருத்தல்: இந்த டிப்ஸ் தொகை ஊழியரின் ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய வழக்கமான சம்பளத்திற்கு (Salaire de base) மாற்றாக இருக்கக் கூடாது. அது முற்றிலும் வாடிக்கையாளர்கள் சுய விருப்பத்துடன் வழங்கும் கூடுதல் தொகையாக மட்டுமே இருக்க வேண்டும். 
  1. ஊதியச் சீட்டில் (Fiche de paie) பதிவு செய்வது எப்படி?

டிப்ஸ் தொகைக்கு வரி இல்லை என்றாலும், வெளிப்படைத்தன்மைக்காக முதலாளிகள் வங்கி அட்டை மூலம் பெறப்பட்ட டிப்ஸ் தொகையை ஊழியரின் மாதாந்திர ஊதியச் சீட்டில் (Fiche de paie) தனியாகக் குறிப்பிட வேண்டும். எனினும்,அது வரி விதிக்கப்படக் கூடிய வருமானத்தில் (Net Imposable) சேர்க்கப்படாது.

இந்த சட்ட சலுகை உணவகத் தொழிலார்களுக்குப் பெரும் நிதி ஆதரவாக அமைந்துள்ளதால்,உங்கள் உரிமைகளைச் சரியாக அறிந்து பயன்படுத்துவது அவசியமாகும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்ட...
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More Articles Like This

- Advertisement -spot_img