HomeCity News

City News

spot_imgspot_img

பிரான்சில் வேலைவாய்ப்பு இழப்பீடு தொடர்பில் காசு வசூல்! அரசு எச்சரிக்கை

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்: தவறான தகவல் தொடர்பால் அதிகப்படியான தொகை வசூல் பிரான்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (France Travail) ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் (caisses de retraite et l'opérateur chargé de l'indemnisation)  தவறான தகவல் தொடர்பால், நூற்றுக்கணக்கான மூத்த குடிமக்களிடம் அதிகப்படியானதொகை வசூலிக்கப்படுகிறது.  இந்த சிக்கலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், வேலைவாய்ப்பு இழப்பீடுகளில் ஏற்படும் பிரச்சனைகளைஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பொறுப்பான  மத்தியஸ்தர் ஜீன்-லூயிஸ் வால்டர் (Jean-Louis Walter) ஆவார். 2024 ஆம் ஆண்டுக்கான அவரது அறிக்கையில், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள பிராந்திய மத்தியஸ்தர்களுக்கு "பல ஆயிரக்கணக்கான யூரோக்கள்" வரைவசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த அதிகப்படியான தொகை வசூலிப்புக்கு காரணம் என்ன? 62 வயதிலிருந்து 67 வயது வரை முழு ஓய்வூதியம்பெறத் தகுதியில்லாத மூத்த குடிமக்களுக்கு, ஓய்வூதியம் கிடைக்கும் வரை வேலைவாய்ப்பு இழப்பீடுவழங்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேலைவாய்ப்பு ஆலோசகர்கள், வேலைநாள் பதிவேட்டில்(relevé de carrière) உள்ள தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தவறான தேதியை பதிவுசெய்கின்றனர்.  ஓய்வூதிய நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து, 65 அல்லது 66 வயதில் முழு ஓய்வூதியம் பெறத்தகுதியுள்ளவர்கள் என உறுதி செய்தால், வேலைவாய்ப்பு நிறுவனம் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  ஆனால், ஓய்வூதிய நிறுவனங்கள் தகவல்களை தாமதமாக அனுப்புகின்றன. இதனால், வேலைவாய்ப்பு நிறுவனம்ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த தவறி, அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகிறது.  மேலும், ஓய்வூதிய நிறுவனங்கள் பின்னோக்கி ஓய்வூதியம் வழங்கும் வழக்கம் இல்லை. அதாவது, அதிகப்படியாகவசூலிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற முடியாது.  இந்த சிக்கலைத் தவிர்க்க, ஓய்வூதிய நிறுவனங்களால் வழங்கப்படும் "சோமேஜ் இண்டெம்னிஸே: ரெகுலரைசேஷன் டி கரியர்" (Chômage indemnisé : régularisation de carrière) என்ற சான்றிதழை பெறுவதுஅவசியம்.  இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களை France Travail தொடர்பு கொள்ளும். பாதிக்கப்பட்டவர்கள்,  மத்தியஸ்தரை அணுகி கடன் தள்ளுபடி கோரலாம்.

பிரான்ஸில் மாணவி காதலை மறுத்த மாணவர் கடத்தி தாக்குதல்!

மே 5, 2024 அன்று மாலை 3:30 மணியளவில், பிரான்ஸ் ரைம்ஸில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால் 16 வயதுசிறுவன் அடையாளம் காணப்பட்ட நபரால் கடத்தப்பட்டார். இவரை ஐந்து பேரால்  Clio வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டார்.  முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் "காதல் தோல்வி" தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே உறவில் இருந்த நிலையில், ஒரு இளம்பெண்ணின் காதலை  நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், குறிப்பாக சகோதரர், மற்றும் தாய் ஆகியோர் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  தாக்குதலின் போது, சிறுவன் காரில் தாக்கப்பட்டு, பின்னர் அலெயின் பொல்லியார்ட் தெருவில் உள்ள ஒருஅடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலும் தாக்குதல்கள்நடத்தப்பட்டன. பின்னர், ரு அராகோ தெருவில் விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.  சிறுவனுக்கு உடல் முழுவதும் பல காயங்கள், மூக்கில் பல உடைப்புகள், வலது முதுகில் 5 வெட்டு மற்றும் அறிவுமற்றும் நினைவு இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. தற்போது சந்தேக நபர்கள் தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டவரிடம் இன்று மதியம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 

பாரிஸ் சுப்பர்மார்கெட்டுகள் தொடர்பில் அரசு எச்சரிக்கை!

பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் இனி இந்த கள்ள வேலை செய்தால் 15000€ வரை அபராதம் என அரசுபுதிய வர்த்தமானியில் திருத்தியுள்ளது. பொருட்களில் விலைகள் அருகே நிறைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விலை அதிகரிக்கும் போது நிறைகளை குறைத்து அதேவிலையில் விற்று வரும் ஒரு முறை பரவலாக பாரிஸ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நீங்கள்அறிந்ததே... இனி வரும் காலங்களில் இந்த மாதிரி எதாவது புத்திசாலிதனமாக செய்ய வெளிகிட்டால் அபராதம்கட்டவேண்டி வரும்...

பாரிஸில் திடீரென மூடப்படும் மெட்ரோ தரிப்பிடங்கள்!

சீன ஜனாதிபதி திரு. ஷி ஜிンピங் அவர்கள் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை பாரிஸுக்கு அதாவது அதிகாரப்பூர்வ, அதாவது விஜயம்) மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வருகையின் போது மேற்கு பாரிஸில் உள்ள பல மெட்ரோ...

பாரிஸில் பயங்கர துப்பாக்கி சூடு! மூவர் பலி!

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய செவ்ரோனில் (Sevran-Seine-Saint-Denis) கடந்த 48 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். போதைப் பொருள் கடத்தலுடன்...

பிரான்சில் சம்பள உயர்வுக்காக சம்பவம் செய்யும் ஊழியர்கள்!

பிரான்ஸ் ரயில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள்இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும்,  மற்றும் ட்ராம்சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகின்றது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரம்புக்களுக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்தி வரும்நிலையில்,இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த சொல்லி வற்புறுத்தியே மேற்படிவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்கதலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

பாரிஸ் இறைச்சி கடைகளில் மோசமான சுகாதார நிலை!

பாரிஸ்: இறைச்சிக் கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை பாரிஸ் நகரின் 18வது மாவட்டத்தில் உள்ள Château-Rouge பகுதியில் அசைவ உணவு கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img