Home Blog Page 109

பாரிஸ்: தமிழ் அம்மாவை பொலிசில் மாட்டி விட்ட மகள்!

பெற்றோராக இருந்தாலும், ‘குழந்தைகளைத் திருத்துகிறேன்’ என்ற பெயரில் அவர்களை அடித்தல், சித்திரவதை செய்தல், பாரிஸில் சட்டப்படி குற்றமாகும். பெற்றோருக்கான தண்டனை, குழந்தை தன் ஆசிரியரிடமோ சக நண்பனிடமோ அல்லது பொலிஸாரிடமோ கொடுக்கும் ஒரு முறையீடால் கிடைத்துவிடும். அதன் பின்னர் தொடர் விசாரனைகளுக்குப் பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள். குழந்தைகள் காப்பங்களில் வளர்வார்கள். பாரிஸில், சிறுவன் நாகேல் மீதான பொலிஸாரின் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பில் பொற்றோரினதும் அரசினதும் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

‘என்ன மனமாற்றம் வந்து, என்னத்த கிழிக்கிறது, சட்டம் என்ன சொல்லுது!..’
கந்தசாமி கேட்டார்.

‘எதுக்கோ போய் என்னத்துக்கோ மாட்டின கதையா போச்சு..’

‘என்ன கத?’
வினோத் கேட்டான்.

‘சொல்றன்’

வாகனம் ஓட விரும்பிய தன் மனைவியை நண்பரொருவர் வாகனம் ஓடப் பழகுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். மனைவியும் இரண்டு குழந்தைகளும் பாரிஸுக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகியிருந்தன. மொழிச் சிக்கல் இருந்தது. பரீட்சைக்குப் போகாமலேயே, நானுறு யூரோ கையூட்டுக் கொடுத்து வாகன ஒட்டுனர் உரிமப் பரீட்சையில் மனைவியைச் சித்தியடையச் செய்தார் நண்பர்.

‘நெட்டுல ஒரு முப்பது யூரோவ கட்டினா.. ஈஸியா எழுதியிருக்கலாமே..’
வினோத் சொன்னான்.

‘கிழிச்சான்..’

‘அந்தளவுக்கு பொறும இருக்கல..’
-கந்தசாமி.

வாகனம் பழகும் நிலையத்தில் மனைவியைக் கொண்டு வந்து சேர்த்தார் நண்பர். தொடர்ந்து வகுப்புகளுக்குப் போக மனைவிக்கு அலுப்புத் தட்டியது. கட் அடித்தார். அன்பு மனைவியை நண்பரால் தண்டிக்க முடியவில்லை. கட்டாயமாக பழகவேண்டிய நேரங்கள் முடிந்தன. வாகனத்தை ஓடிக் காட்டுவதற்கான பரீட்சைக்கு மனைவியைத் தயார் செய்தார். மறுபடியும் கையூட்டு கொடுத்து பரீட்சைக்குத் தேதி குறித்தார்.

ஓடிக்காட்டும் இடத்தில் காரை எடுக்கச் சொல்லிவிட்டு இன்பெஸ்டர் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. பதில்களுபகுப் பதிலாக, மனைவி தலையை மட்டும் கீழும் மேலும் அசைத்தாள். போதாகுறைக்கு பக்கவாட்டிலும் ஆட்டினாள். கேள்வி கொஞ்சமும் விளங்கவில்லை, பதில் சுத்தம். நிலமை அதாளபாதத்துக்குப் போய்க் கொண்டிருந்தது.

இன்பெஸ்டர் காரை விட்டு இறங்கச்
சொன்னார்.

‘களவா கிழிக்க வெளிக்கிட்டா களவாவாவே கிழிச்சிடணும்..’
கந்தசாமிக்குப் பொறுக்க முடியவில்லை.

ஒரு கிழமை தாண்டவில்லை, கடிதமொன்று வந்தது. Commissariat பொலிஸ் அழைத்திருந்தது. கிழிஞ்சுது. இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு நண்பர் பொலிஸ் நிலையம் வந்து சேர்ந்தார்.

கேள்விகள் சரிமாறியாக வந்து விழுந்தன.

நண்பர் தன் தவறு எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார். ஐந்து வருடத் தடை உத்தரவு. கூடவே, பொலிஸ் கொடுத்த அறிவுரைகளையும் அள்ளி வாங்கிக் கொண்டார்.

குழந்தைகளை இருவரையும் தனியே அழைத்து விசாரித்தனர்.

‘அம்மா படிக்கிறவவா?’ கார் பழகப் போறவவா?’
குழந்தைகளிடம் கேட்கப்பட்டது.

‘இல்ல, அம்மா அடிக்கிறவா..’
என்றாள் மூத்தவள்.

‘அக்காவுக்கு அம்மா அடிக்கிறவ வா?’

‘அக்காவுக்கு மட்டுமல்ல, எனக்கும் அடிக்கிறவா..’
இளையவள் சொன்னாள்.

  • லக்சன் வித்தியா

பாரிஸில் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்!

0

பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.

கோடிகளில் புரளும் பிரான்ஸ் தமிழ் ஏஜென்சிகள்!

0

பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.

உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு! 

பிரான்ஸ்: வீடு கனவை எப்படி நிறைவேற்றலாம்?


உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு பணம் வீடு வாங்க நீங்க வரி இல்லாமல் கொடுக்க முடியும்..? 

ரியல் எஸ்டேட் சொந்த வீடு வாங்குவதற்கு எனது பிள்ளையின் தனிப்பட்ட பங்களிப்பைக் கட்ட நான் பணம்கொடுத்தால், வரி செலுத்தாமல் அவருக்கு எவ்வளவு கொடுக்க முடியும்?  இந்த கேள்வி பிரான்ஸில் பலபெற்றோர்களுக்கு உள்ள ஒரு கேள்வியாகும். 

முதலாவது பண நன்கொடை, அதிகபட்சம் 31,865 யூரோக்கள்.  “உங்கள் சந்ததியினருக்கும்குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும். கொடுப்பவர் 80 வயதுக்கு உட்பட்டவராகவும், பெறுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்

இந்த நன்கொடை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.இந்த தொகையை தந்தையும் தாயும்கொடுக்கலாம், எனவே இது தொகையை இரண்டால் பெருக்குகிறது. இந்த தொகை மொத்த வரி விலக்குமூலம் பயனடைகிறது. இது ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்

இந்தத் தொகை பணமாக வழங்கப்படலாம், அசையும் சொத்து (கார், நகைகள்…), ரியல் எஸ்டேட் மற்றும்பத்திரங்கள் (பங்குகள், பங்குகள்…) ஆகியவற்றிலும் கொடுக்கப்படலாம்.  “ஒவ்வொரு பெற்றோரும் ஒருகுழந்தைக்கு 100,000 யூரோக்கள் வரை நன்கொடை கட்டணம் செலுத்தாமல் கொடுக்கலாம். 

எனவே ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு 200,000 யூரோக்களை உரிமைகளில் இருந்து விலக்குஅளிக்கலாம். இந்த 100,000 யூரோக்கள் குறைப்பு ஒன்று அல்லது பல முறை பயன்படுத்தப்படலாம். இவ்வாறு, முதல் நன்கொடையின் போது குறைப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாவிட்டால், இன்னும் 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிலுவைத் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்” என்று பிரான்ஸ் வரிஇணையதளம் நினைவுபடுத்துகிறது.

ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து 200,000 யூரோக்கள் (100,000 x2) மற்றும் 127,460 யூரோக்கள்(31,865 x 4) அவரது நான்கு தாத்தா பாட்டிகளிடமிருந்து ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் நன்கொடை உரிமைஇல்லாமல் பெறலாம்…

பிரான்ஸில் திருமணத்தை பாதியில் நிறுத்திய தமிழ் மணமகள்!

பிரான்ஸில் மணமகன் கறுப்பாக இருப்பதாக கூறி சம்பந்த கலப்புடன் திருமணத்தை நிறுத்தி தமிழ் மணமகள்! முழுமையான சம்பவம் வீடியோவில் உண்டு..

பிரான்ஸில் 5000€ கிளினீங் ஒப்பந்த வேலை! தமிழர்கள் முந்துங்கள்!

0

நீங்கள் கூட்டி+அள்ளிக்கொட்டி + கழுவித்துடைக்கும் வேலையில் கரைகண்டவரா…

அப்படியானால் இங்கே வேலைக்கு விண்ணப்பியுங்கள்…

இணைப்பை இங்கே +அழுத்தி உட்சென்றவுடன்….

“Agent de Propreté ” என்ற பகுதியை அழுத்தி விண்ணப்பிக்கவும்⤵️

https://www.onetrecrute.com/accueil.aspx?LCID=1036

ℹ️🟡ஒப்பந்தத்தில் [Contrat] இங்கே வேலைசெய்து ஒப்பந்தம் [Contrat ] முடிந்து வெளியேறும்போது 5000€ கொடுப்பார்களாம்…

இங்கே அழுத்தவும் முகவரியைக்காண⤵️

https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-nord/

முகவரி ⤵️

https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-c/

பிரான்ஸில் அடிக்கடி இசைநிகழ்ச்சி! விடப்பட்ட சந்தேகம்!

பிரான்ஸ் தமிழர்களிடமிருந்து புலிகளுக்காக சேர்க்கப்பட்ட பெருந்தொகை படத்தை வெள்ளையாக்கும்நோக்கிலேயே அண்மையில் அதிகமாக இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருவதாக விமர்சனம் ஒன்றுவைக்கப்பட்டுள்ளது.

இறுதி போரில் மக்களிடமிருந்து அதிகமான பணம் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாகவும்,அவை குறிப்பிட்டகாலம் வெளியில் எடுக்கப்படாமல் வைத்திருந்துவிட்டு தற்போது அவற்றை எடுத்து வெள்ளையாக்கி வருவதாகசொல்லப்படுகின்றது..

பிரான்ஸ் மக்களின் வெள்ளை பணத்தை , பதுக்கி கறுப்பாக்கிவிட்டு தற்போது மீண்டும் அவர்களை வைத்துவெள்ளையாக்கி வருவதாக சில அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எமது கருத்து: இது தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் யாரும் எதையும் பேச சொல்ல முடியும்.எந்தஆம்பிளையை மடக்கிறது என்றாலும் கடைசில சமூகத்தில் இருக்கிற “பெண் பலவீனம்” என்ற பதத்தை போல , இப்ப எது என்றாலும் இயக்க காசு என்ற ஓரு பல்லவி விடாமல் பாட ஒவ்வொரு நாட்டில் ஆட்கள்இருக்கிறார்கள்.

ஆனாலும் காலம் சரியானதை நிருபிக்கும்வரை நாம் காத்திருக்கதான் வேண்டும்..

பிரான்ஸில் மூன்று மடங்காகிய காப்புறுதி கொடுப்பனவு!

இன்சுரன்ஸ் காப்பீட்டாளர்களின் தொழில்முறை கூட்டமைப்பு படி, கலவரத்தின்  பின்னரான சேத கோரிக்கைஇப்போது 650 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இது கடந்த வாரம் எதிர்பார்க்கப்பட்ட 280 மில்லியனை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

 ஜூன் 27 அன்று ஒரு போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்தைத் தொடர்ந்து நகர்ப்புறவன்முறை தொடர்பான சீரழிவு காப்பீட்டாளர்களுக்கு 650 மில்லியன் செலவாகும் என்று தொழில்முறைகூட்டமைப்பு செவ்வாயன்று மதிப்பிட்டுள்ளது,

இந்த நகர்ப்புற வன்முறையின் விலையில்  பாதிக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர்அதிகாரிகளின் 3,900 சொத்துக்களைப் பற்றியது என்று பிரான்சின் காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்புளோரன்ஸ் லஸ்ட்மேன் ஒரு அறிக்கையில் மேற்கோள் காட்டினார். 

தொழில்முறை சொத்து மீதான உரிமைகோரல்கள் குறிப்பிடப்பட்ட 650 மில்லியன் யூரோக்களில் 55% மற்றும்உள்ளூர் அதிகாரிகளின் சொத்துக்கள் 35% என்று பிரான்ஸ் அஷ்யூரர்ஸ் கூறுகிறது.

ஜூலை 1 ஆம் தேதியிலிருந்தே, பொருளாதார அமைச்சர் புருனோ லு மெய்ர் காப்பீட்டு நிறுவனங்களைஅறிக்கையிடும் நேரத்தை நீட்டிக்கவும், விலக்குகளை குறைக்கவும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தொழில்வல்லுநர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கவும் கேட்டுக் கொண்டார்.  

பிரான்ஸ் நட்சத்திர வீரர் Kylian Mbappe தமிழர் பூர்வீகமா! ஆதாரம்!

0

பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாபே தனது சொந்த ஊரான கேமரூனுக்கு சென்றிருந்தார்.. இது தொடர்பான காணொளி! இந்த கேமரூன்… மொழி தமிழருக்கு மிக நெருங்கிய ஒரு மொழியாகும்… கேமரூன்கள் பேசுவது அச்சு அசல் தமிழ் போலவே இருப்பதாக பல மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்..

பிரான்ஸ்: யாழ் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த அவமானம்!

பிரான்ஸில் இருந்து யாழ் திரும்பிய தமிழ் இளைஞரை வீட்டுக்குள் எடுக்காமல் விரட்டி அடித்துள்ள சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ள

குறித்த இளைஞர் பாரிஸில் இருந்து பல காலத்திற்கு பிறகு யாழ் திரும்பி வீட்டுக்கு பிள்ளைகள் மனைவியோடுசென்று கேட் ஐ திறந்த போது அவரது பெற்றோர் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்த்து வர வேண்டாம்என்று சொல்லியிருக்கிறார்கள்..

அதாவது அவர் மனைவி வளவுக்குள் வரவிடமாட்டோம் என்று சண்டை… ஏதோ சீதன சிக்கல் என்று கேள்வி! சகோதரனுக்கு பேசிய சீதன காசு பின்னர் மனைவி வீட்டாரால் கொடுக்கப்படவில்லையாம்,கேட்டதற்கு குறித்தஇளைஞர் வேண்டாம் என்று சொன்னதால் நாம் குடுக்கவில்லை என பெண் வீட்டார்கூறியிருக்கின்றனர்,இரண்டு பிள்ளை பிறந்தும் விடாம சீதன காசு மீதியை தர சொல்லி இளைஞர் குடும்பபெண்கள் மோதல்

சுற்றி எல்லோரும் அக்கம் பக்கத்தினர் பார்க்க,அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் அமைதியாக இருக்க,பெண்கள்அதாவது மகளிர் படையணி இந்த தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது..

இதனால் மனமுடைந்த இளைஞர்,மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கருத்து: வெளிநாடு போய் சகோதரன் காசில் நன்றாக இங்கு சாப்பிட்டு தூங்கிவிட்டு,அற்ப சீதன காசுக்காகசொந்த சகோதரனை திட்டி அவர் காசில் கட்டிய வீட்டுக்குள் வர விடாமல் கத்தி கூச்சல் போட்டு அர்ச்சனைசெய்வது எந்த விதத்தில் நியாயம்..?