Home Blog Page 114

அடங்காத நாடோடி காற்றல்லவா !

நீங்கள் எப்போதாவது இப்படி நினைத்ததுண்டா? சின்ன வயதில் வாகனங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்றில் ஏறி அது எங்கே கடைசியாக செல்கின்றதோ  அங்கேயே  போக வேண்டும் என்றும்  , யாராவது கடத்திச்சென்று  ஊர் சுற்றவேண்டும் என்று, நடைபெறாத விடயம் என்றாலும் மனம் இப்படியெல்லாம் யோசிக்க தோன்றும் அல்லவா? பெரும்பாலும் அனைவரும் இப்படி ஏதாவது நினைத்திருக்கக்கூடும். ஏதோ ஒன்று நம்மை கட்டி வைத்திருக்கின்றது போலும் அதை நாம் மீறி செல்ல வேண்டும் என்றும்  நினைத்திருப்போம். இந்த முயற்சியின் பலனாகவே பயணம் நம் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக  பிணைந்து காணப்படுகின்றது. 

பயணம் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒன்றை தேடி அலையவைத்து  கொண்டுதான் இருக்கின்றது. பயணம் என்பது ஒரு விடை தெரியா வினா . சில பேரிற்கு மிகவும் பிடித்த ஒன்று சில பேரிற்கோ  ஏனோ தானோ என்று மாறுபட்டு கொண்டிருக்கும் ஒன்று . சிறு வயதில் யன்னல் ஓரம் எட்டி பார்க்கும் சிறுவனின் உலகம் எப்படி இருக்கும் என்ற தேடல், மனதில் எதையோ ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் தேடல், சிறுபிள்ளையின் அழுகையின் தேடல், சுதந்திரத்தை தேடும் ஒரு கூட்டுக்கிளியின் தேடல், வேலைக்கு சென்று பலகாலத்திற்கு பிறகு வீடு திரும்பும் தொழிலாளியின் தேடல், என எல்லா தேடலிலும் ஒரு பயணம் இருக்கும். தேடல் உள்ள உயிர்களிற்க்கு தினமும் பசி இருக்கும் என்று வைரமுத்துவின் வரிகள் மிக சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

 ஒவ்வொரு பயணமும் ஒவ்வொருவருக்கும் புதுப்புது சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பல நினைவுகள் ஊட்டுவதாகவும்  காணப்படும். சில பயணங்கள்  வினா தெரிந்து விடை அறியாதவையாகவும் சில பயணங்கள்  விடை தெரிந்து வினா அறியாதவையான புதிராகக் காணப்படும் . இது போன்ற பல சுவாரஷ்யம் மிக்க  ஒரு பயண தொகுப்பை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி  நூல்  சிறப்பாக எடுத்து  கூறுகின்றது. தான் சிறுவனாக இருக்கும் போது யன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்த்த  உலகம்  வளர்ந்து வந்து வெளியே  சுற்றிப் பார்த்த உலகம் என்று  பல நினைவுப் படிகளினூடாக வெளிப்படுத்துகின்றார். 

“ தேசாந்திரி” என்பது பல இடங்களுக்குச்சென்று வாழ்பவன் (நாடோடி ) என்று கூறப்படுகின்றது. எஸ் ராமகிருஷ்ணன் அவரது  வாழ்கை தேடல்களில் கேள்வி எழுப்பிக்கொண்டு சென்ற பயணங்களின் நினைவுகள், அவரது பால்ய வயதில் பெரியவர்கள் சொன்னகதைகள், அவர் படித்த பாடநூலில்குறிப்பிட்ட சுவாரஷ்யமான இடங்கள் போன்றவற்றிற்கு சென்று தற்போதுள்ள நிலைகள் என்ன என்றும் அதில் தான் பெற்ற அனுபவங்கள்  அவற்றில்  சில நேரம் ஏற்பட்ட  விரக்தி நிலை என தனது கிறுக்கலின் மூலம் அவரின் ஆதங்கங்களையும்  கவலைகளையும்  வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் எவ்வாறு தனது பயணத்தை அனுபவித்துள்ளார்  என்பதையும் ,  ஒன்றுமில்லை என்று நாம் நினைக்கும் அனைத்து சிறு விடயத்தையும்கூட  எவ்வாறு  ரசித்துள்ளார் என்பதையும் அவரது எழுத்துருவில் சிறப்பாக காணமுடிகிறது. அவர் சென்ற இடங்களிற்கும் நாம் நேரில் சென்று பார்ப்பது போன்ற அனுபவம் அவரது தேசாந்திரி பதிப்பை வாசித்த போது  எனக்கு ஏற்பட்டது. 

சில பண்டைய காலத்து சிற்பங்கள், கட்டிடங்கள்  என்பன எவ்வாறு  நலிவுற்று கவனிப்பாரற்று காணப்படுகின்றது என்றும் ,  மேலைதேய மற்றும்  கீழைதேய  நாடுகளில்  பழைய இடங்களின்  பராமரிப்பு எவ்வாறு வேறுபடுகின்றது என்றும்  ஆங்காங்கே   அவரின் ஆதங்கம் வெளிப்படையாக தென்படுகின்றது. எந்த ஒன்றையுமே காதால் கேட்டு அதன் நிலையை  அறிய முடியாது,  அதனை நேரடியாக சென்று பார்வையிடுதலின் உணர்வுகள் எப்படியானது  என்பதை உணர்ந்து அந்த பயணங்களை  சுவாரஷ்யம் நிறைந்த ஒன்றாக மாற்றலாம் என்று அவர் அழகாக குறிப்பிட்டுள்ளார். 

இப்புத்தகம் வாசிக்கும்போது நானும் என் சிறுவயதில் இருந்த ஊரிற்கு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றிய ஊர் பலவருடகாலம் கழித்து  செல்லும் போது புதியதாகவே தோன்றியது . 

நான் சிறுவயதில் வசித்த வீடு , கல்வி கற்ற பாலர் பாடசாலை, ஓடி விளையாடிய வீதி, அண்ணாவுடன் சைக்கிள் பயணத்தில் காலை வண்டிச் சில்லிற்குள் விட்டு அழுத நினைவுகள், வீட்டிற்குத் தெரியாமல் நாய் குட்டியை வளர்த்த நினைவுகள்  என அந்த அந்த  இடங்களிற்கு செல்லும் போது மறக்கமுடியாத நினைவுகள் வெளியில் சொல்லி தெரிவிக்க முடியாத உணர்வாக காணப்பட்டது . 

எனது இப்பயணம் சுவாரஷ்யம் நிறைந்த  ஒன்றாக  இருந்ததற்கு  இந்த புத்தகமும்  ஒரு காரணம்.  இது போன்றதே  நம் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வேறு வேறான தேடல் நிறைந்த ஒன்றாகவே காணப்படும். அதை சுவாரஷ்யம் நிறைந்த ஒரு மறக்கமுடியாத பயணமாக மாற்றுவது  தத்தமது கைகளில் தான் உள்ளது. ஒரு கூட்டு கிளியை தூக்கி சென்று ஊர் சுற்றுவது போலவே  நானும்  சுற்றி திரிகின்றேன். கூட்டின் கதவுகள் திறப்பதற்கும் காலம் கிடக்கின்றது போலும். இருந்தாலும் இந்த சுற்றுதலிலும் பல சுவாரஷ்யம் ஒளிந்து தான்  இருக்கின்றது. 

நன்றி.

இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?

மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.

ஏன் வெறுப்பு..? சூழலில் காணப்படும் Eco system,உணவு சங்கிலி தொடக்கம் எல்லாமே இயற்கை மனிதனை தனது அமைப்பின் ஒரு அங்கத்தவராக மட்டும் பார்க்கின்றது.இப்படி மனித இனத்தை இயற்கை பத்தோடு பதினொன்றாக நடாத்துவது Ego system மனநிலையில் வாழ தொடங்கிய மனித இனத்திற்கு பிடிக்க வில்லை.humanity மனிதனுக்கு மட்டும் மனிதாபிமானம் பார்க்கும் இவர்களுக்கு அவை ஒத்துவராமல் ஒரு கட்டத்தில் இயற்கையை விட்டு ஒதுங்கி கொண்டனர்.

இயற்கை இரக்கம் பார்க்காது..அதற்கு அப்படி ஒன்று தேவையில்லை..தனது சமனிலையை பேண அது என்ன என்றாலும் செய்யும்..அதன் சமனிலையை குழப்பாமல் இருப்பதே/அதற்கான புரிந்துணர்வை வளர்த்து கொள்வதே இந்த பூமியின் அதிகபட்ச புத்தசாலிதனம்,இந்த புத்திசாலிதனம் இயற்கையுடன் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும், ஒரு சிறு ஆற்றின் நீர் பெருக்கு கோடிக்கணக்கான எறும்புகளை நொடி பொழுதில் கொன்றுவிடும்,அதற்கு எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.

மனித இனம் காடுகளில் இருந்தால் பாம்பு,நுளம்புகடியிலும் என பலவாறாக அழிந்து கொண்டிருக்கும்.ஆனால் இயற்கை Eco system நீங்கள் அங்கு வாழ உழைக்க தேவையில்லை.போட்டி இருக்காது,அவரவரவருக்கு என்று ஒரு அந்த இயங்கியல் சங்கிலியில் இடமிருக்கும்.அது உங்களை வாழ வைக்கும்.அதே போல தனக்கு ஏற்ப உள்ள எல்லாவற்றையும் ஆக்கி அழித்தும் கொள்ளும்.

ஆனால் Ego system மனித இனம் தன்னை இயற்கையில் இருந்து விடுவித்து சற்று விலகி கொண்டது.ஆனால் இங்கு இயற்கை போன்று வாழவைக்க யாரும் இல்லை.. மனிதர்கள் தாமாக உழைத்து தொடர்ச்சியாக ஏதோ ஒன்றை உருவாக்கி கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவிர இங்குள்ள இதன் தொடர்ச்சியாக இயற்கையை பதிலாக செயற்கை முறை ஒன்றை மனித இனம் தமக்கு தாமே உருவாக்கி கொண்டது.

தனது ego மனநிலைக்கு ஏற்ப மேலே கீழே என்று ஒரு சிஸ்டம் உருவானது. ஆனால் இங்கும் மனிதர்களுக்கு நிகழ்வது என்னவோ அதே நிகழ்வுகள்தான்.மனித இனம் இங்கு உழைத்து உண்ண வேண்டும்,கட்டாய வேலை,கட்டாய படிப்பு கட்டாய ஊசி என்று சமூக சிறை வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் அது அவற்றை ஏற்று கொள்கின்றது காரணம் இயற்கையை விட்டு செயற்கையை உருவாக்கி கொண்டதும் நாம்தான் என்று அதற்கு தெரியும்.

தனி மனித EGO எல்லாமே ஒன்று சேர்ந்து சிஸ்டத்தின் உச்சியில் மிகப்பெரிய MEGA EGO ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளது.அது இயற்கையை ஒத்த முற்று முழுதாக செயற்கை Artificial intelligence,Multi planatory living என்று ஏதோ எல்லாம் அடைய முயற்சி செய்வதாக கூறி கொள்கின்றனது.EGO மனித இனத்தின் மனம் இயற்கை மாறாக உருவாக்கி கொண்ட செயற்கை system மனிதர்களை இப்படி பாடாக படுத்துகின்றது.இங்கு ஆக்கம் இருக்குதோ இல்லையோ அழிவு தாராளமாக இருக்கின்றது!

மனித இனம் செயற்கைதனத்தில் நவீன விலங்குகளாக அவர்களை அறியாத அடிமைகளாகியுள்ளனர்.காட்டிலிருந்து தப்பி பாதுகாப்பாக நாட்டுக்கு வந்துவிட்டோம்,நாம் நாகரீம் அடைந்துவிட்டோம் என்று எல்லாம் மனித இனம் தன்னை பற்றி தானே பெருமை பேசி கொள்கிறது!

இக்கரைக்கு மாட்டுக்கு அக்கரை பச்சை போன்று இயற்கையில் இருக்கும் போது செயற்கை நன்றாக இருந்தது.சரி என்று செயற்கைக்கு வந்த மனித இனத்திற்கு இன்று இங்கிருந்து பார்க்க இயற்கை நன்றாக இருக்கின்றது.ஆனால் போக முடியவில்லை அதனால் எப்போது vacation வரும் என்று Calender ஐ பார்த்து கொண்டுள்ளது.

அடிப்படை மனசிறையில் மனித இனம் இயற்கையோ செயற்கையோ தனது முடிவை தானே எழுதி கொள்கின்றது.மற்றபடி இங்கு முற்று முழுதாக இருப்பது இயற்கை மட்டுமே,செயற்கை என்ற ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது.அதாவது இயற்கைக்கு மாறான ஒன்றை இங்கு உருவாக்க இயலாது.இங்கு உருவாக்கி கொண்டிருப்பவை எல்லாம் இயற்கையின் இன்னொரு வடிவங்களே,அது இருமை இயல்புகளின் ஒன்றான அழிவை மனித இனத்திற்கு காட்டி திரும்ப தன்னை(இயற்கை) நோக்கி வர செய்வதற்காக கூட இருக்கலாம்.(reverse psychology) நாம் விளங்கி கொள்ள வேண்டியவை அதிகம்! அசலை விட போலியே பார்க்க அதிகம் நல்லாக தெரியும் என்பார்கள்.ஆனால் எமது பார்வை,பார்க்கும் விதம் சரியாக இருக்கும் போது நமக்கு சரியானது சரியானதாக தெரியும்.

நாம் சிறுவயது முதல் பின்தொடரும் கல்வி கொள்கைகள்,கற்கும் பாடங்கள் எமக்கு செயற்கை அறிவையே தருகின்றன.அவை எங்களை எல்லாவற்றையும் செயற்கையாக பார்க்கவே தூண்டும்,ஆக செயற்கையாக நடக்கும் எல்லாம் சரியாக தெரியும். ஆனால் இயற்கையான அறிவு எமக்குள் உண்டு.அதை வைத்து இயற்கையாகவும் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.இரண்டு விதமாகவும் பார்த்து கொள்ளும் போதே நமக்கு தெளிவு கிடைக்கும்!

பணத்தின் இயல்பும் இயங்கியலும்…

0

பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது பணம் உண்டான காலம் மிக சிறியது இருந்த போதிலும் இந்த பணம் எப்படி இந்தளவுக்கு மனிதர்கள் வாழ்வில் நிலைபெற தொடங்கியது அதன் இயல்புகள் என்ன? பணத்தை எப்படி நாம் பார்க்கிறோம்? எப்படி பார்க்க வேண்டும் என்று சற்று விளக்கமாக ஆய்ந்தறிவோம்.

நீரானது உலகில் மொத்த மேற் பகுதியில் அதிகமான சதவீதத்தை தன்னுள் வைத்துள்ளது.நிலமானது பூமி எங்கும் மேற்பரப்பில் உள்ளது.நெருப்பானது பூமிக்கடியில் உட்கோள பகுதியில் எரிந்து கொண்டுள்ளது.காற்றானது வாயு மண்டலமாக பூமியை சுற்றி ஒரு படையாக உள்ளது.ஆகாயம் அதற்கு அடுத்து ஒரு படையாக ( layer ) ஆக உள்ளது.ஐம்பூதங்களும் இவ்வாறே பூமி என்ற ஒன்று உருவாகி இயக்கி கொண்டுள்ளது.

பூமியில் மனிதர்களால் செய்யப்படும் எல்லாமே இயற்கையில் இருந்து எடுத்து கொள்ளப்படுபவைதான்,இயற்கையின் இயல்புகள் அவற்றில் ஆழமாக காணப்படும்.பூமியில் பெருமளவு நீரானது உப்பாக கடலாக காணப்படுகின்றது,சிறிதளவு நீரே குடிக்க உகந்ததாக உள்ளது.அதே போல பணமும் சிறிதளவு பணமே பாவனைக்கு உகந்த அளவில் இருக்கும்.உப்பு கடல் நீர் மனிதர்களின் அடிப்படை தேவையான குடிப்பதற்கு உகந்தது அன்று! பணத்தின் பெரும்பான்மையும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பயன்படாது,வேறு தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு பயன்படுகின்றது.

நீரானது நகர்ந்து சென்று கொண்டே இயற்கையை வளமாக்கி கொள்ளும்,ஓரிடத்தில் தேங்குவதால் நீர் அசுத்தமாகி அதன் இயல்பை இழந்துவிடும்.பணமும் அதே போல ஓடி கொண்டே இருக்கும் போதே அது தனது பெறுமதியை அதிகரித்து கொள்ளும்,ஒரே இடத்தில் ஆங்காங்கே குவியும் போது பணம் தீமையாகி அதன் இயல்பை இழந்து விடுகின்றது.அதனால் தீமைகளே விளையும்.

பணத்தை நீர் போல ஓட விடுவது அதாவது முதலீடுகளில் இட்டு தொடர்ந்து பணத்தை ஓட வைத்து கொள்பவர்களை நோக்கியே பெருமளவு பணம் ஈர்க்கப்படுகின்றது.அவர்களே பெரிய செல்வந்தர்களாகிறார்கள்.அவர்களை நோக்கி பணம் நீர் போல நகர்ந்து வரும்.இன்றைய உலகில் பெரிய செல்வந்தர்கள் எல்லோருமே பணத்தை நகர்ந்து செல்லும் நீரை போன்று செல்லும் பணத்தால் பெரும் பணக்காரன் ஆனவர்கள்,அதாவது நகர்ந்து செல்லும் நீரை சரியாக கையளா தெரிந்து கொண்டவர்கள்.

இதற்கு மாறாக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என நினைப்பவர்களை நோக்கி பணம் வருவதில்லை,அப்படி வரும் பணமும் தன் இயல்பை இழந்து தானும் கெட்டும் அவர்களை கெடுத்துவிடும். இயற்கையில் எதுவும் தன் இயல்பை இழக்க விரும்புவதில்லை,தங்களை ஒத்த இயல்புகளை நோக்கியே கவரும் நகர்ந்து கொண்டே இருக்கும்.இவர்கள் இருக்கும் செல்வத்தையும் இழந்து கொள்கிறார்கள்.

அதே போல பெரும் தவறான அதிர்வுகளால் கிளர்ந்து எழும் பண அலைகள் சுனாமி போன்று நாடுகளை துவம்சம் செய்து மூழ்கடித்துவிடும்.சுனாமியை எதிர்க்க முடியாது? ஓடி தப்புவதான் தப்புவதற்கு ஒரே வழி! ஆழமான கடல் எவ்வாறு அமைதியாக இருக்குமோ அதே போல் பணத்தின் ஆழம் அதிகமாக அமைதி தரும்.இரைச்சலை ஏற்படுத்தி பணம் பற்றிய பயத்துடன் இருப்பவர்கள் கரைகளில் நின்று அலைகளிடம் அடி வாங்கி கொண்டிருப்பார்கள்,கடலின் மிகபெரிய எதிர்மறையான சுனாமி,ஆழம் குறைந்த கடலிலேயே பாதிப்பை உண்டு பண்ணும்.ஆழமான கடலில் சுனாமி அலை நகர்வதே தெரியாமல் இருக்கும்.அதாவது பணத்தின் ஆழம் அறிந்தவர்களுக்கு அங்கு நிற்பவர்களுக்கு அதனால் ஆபத்து இல்லை. ஆழத்தை பார்த்து பயந்து கரையில் நிற்பவர்களுக்குதான் ஆபத்து.

பெரும் செல்வந்தர்கள் பணத்தை பற்றி பெரிதாக அலட்டிகொள்வதில்லை.பணத்தின் இயல்பிலேயே அதனை எடுத்து கொள்வார்கள்,ஆனால் மற்றவர்கள் பணத்தை புனிதபடுத்தி பயந்து கொள்வார்கள்! அது அவர்களது பலவீனத்தையும் அவர்கள் ஆழ கடலில் போக பயந்து கரையில் நிற்பதால் ஓய்வே இல்லாத அலைகளை தமது வாழ்வில் ஒவ்வொரு கணமும் எதிர்கொள்கிறார்கள்.அது அவர்கள் வாழ்வில் அமைதியீனத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கும்.

இயற்கையை இயக்கும் நீரை இயக்குவதில் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று என்பன காரணிகளாகவும் இருக்கின்றன.உயர்வான நிலபகுதியில் இருந்து தாழ்வான நிலபகுதி நோக்கி நீர் பாயும்.அதே போன்று நெருப்பு நீரை எரித்து ஆவியாக்கி உலகெங்கும் நகர்த்தி செல்லும்.காற்றும் ஆகாய அதிர்வுகளும் நீரை நகர்த்தி செல்வதில் தமக்குரிய பங்குகளை வகிக்கின்றன.பணம் காற்று போல பறக்கும்,நெருப்பை போல எரிக்கும்,ஆகாயம் போல அந்தரத்தில் தொங்கும்,தொங்க விடும்.எல்லாவிதமான ஐம்பூத இயல்புகளையும் பணம் தன்னகத்தே கொண்டுள்ளதால்தான் அது ஒரு பெரிய சக்தியாக இருக்கின்றது.

இந்த பூமியும் சரி மனித உடலும் சரி நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என ஐம்பூதங்களினால் ஆனது.இங்கு நமக்கு தெரியும் எல்லாவற்றிலும் ஐம்பூத இயல்புகள் உண்டு,நமது அறிவை வைத்து அதன் இயல்புகளை தெரிந்து கொள்ளும் போது எமது வாழ்க்கை வாழ இலகுவாகின்றது.

நியூயோர்க்கில் வென்ற தமிழரும் யாழ்ப்பாண சமூகமும்!

0

தனது திறமையால் நியூயோர்க் மக்களை திரும்பி பார்க்க வைத்த யாழ்ப்பாண தமிழர்!

18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார்.நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடாந்த போட்டியில் விருது

இலங்கை தமிழரான திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடையே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளது.அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டில், சிறந்த தெரு உணவு விற்பனையாளருக்கான நியூயோர்க்கின் வருடாந்த போட்டியின் வெண்டி விருதை திருக்குமார் கந்தசாமி வென்றுள்ளார்.மேலும் திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடை குறித்த விபரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசையின் சிறப்பம்சம

நியூயோர்க் இரட்டைக் கோபுரம் அருகே கிறிஸ்டோபர் தெருவில் திருக்குமார் கந்தசாமியின் தோசை கடை காணப்படுவதாகவும் இவரின் கடையில் விதம் விதமான தோசைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசையுடன் சாப்பிடுவதற்கு தேவையான சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமென்பதால் இவருக்கு எல்லா நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

திருக்குமார் கந்தசாமி, உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயோர்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோட வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதே கந்தசாமி ஊரில் இந்த கடையை போட்டிருந்தால் எப்பவோ மூடிட்டு போக வேண்டிய நிலையே 90% வீதம் அவருக்கு ஏற்பட்டிருக்கும்..அவர் எங்கு இருந்தாலும் அதே தோசையைதான் போட்டிருப்பார்,ஊரில் அவ்வாறு ஒரு கடையை அவரால் போட்டிருக்க முடியாது,போட்டிருந்தாலும் தொடர்ந்து கொண்டு நடாத்தவும் முடியாது,ஆனால் அதே ஊர் இன்று நியூயோர்க்கில் புகழ் பெற்றதும் அவரை பாராட்டுகின்றது..

ஒருவருக்கு திறமை மட்டும் போதாது,அந்த திறமையை தொடர்ந்து வளர்த்து அதனை ஏற்று கொள்ளும் சமூக சூழலும் இருக்க வேண்டும்.சமூகமா தனி மனிதர்களா என்று பார்த்தால்,எவ்வளவு பலமான திறமையான தனி மனிதர்களையும் பலவீன சமூகம் வென்று விடுகின்றது.இவருக்கு இதுதான் நடந்திருக்கின்றது.இவர் தனது திறமையை ஏற்று கொள்ளுகிற இடத்தில் அதனை செய்து காட்டியிருக்கார்..திறமை ஏற்று கொள்ளப்படும் போது தனி மனிதர்களுக்கு கிடைக்கும் உந்தம்,மிக பெரிய சாதனைகளை செய்ய அவர்களை தூண்டும்.

மாறாக பலவீனமான சமூகம் திறமைகளை ஏற்று கொள்ளாமல் தனி மனிதர்களின் திறமைகளை மழுங்கடித்து தன்னையும் அழித்து கொள்ளும்.திறமையான தனி மனிதர்கள் தம் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வெற்றியை பெற்றால்,அந்த வெற்றியை தனது சமூக வெற்றியாக கொண்டாடி கொள்ளும்.குறித்த தமிழர் தனி நபராக வெற்றி பெற்றிருக்கின்றார்,அவரை பெற்றி பெற வைத்தது நியூயோர்க் மற்றும் அங்கு வரும் சமூகம் மட்டுமே..

இதில் தமிழ் சமூகமாக கொண்டாட ஒன்றுமேயில்லை..

உணவு – சமூக இயங்கியல் பாகம் I

0

இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில் சென்று அதே போல் இயந்திர கதியில் தயாரிக்கப்பட்டவற்றை வேகமாக சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு ஓடி விடுகிறார்கள் மக்கள்..

வீட்டில் என்றாலும் வேலை செய்யும் மனைவி வேகமாக வேகமாக ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் வைத்ததை எடுத்து வேக வைத்து அல்லது சிறு சமையலை வேக வேகமாக செய்து சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டி கொண்டு சென்று சாப்பிடுவதாக கழிகின்றது…

இதனையும் தாண்டி வீட்டில் சமைக்கும் பெண்களும் டீவி,யூடிப் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு சமைப்பது என மனிதர்களின் அடிப்படை தேவையும் பிரதான சக்தி மூலமுமான உணவு இன்று இவ்வாறு அதன் உயிரோட்டத்தை இழந்து வருகின்றமைக்கு மேற்குறிப்பிட்ட சமையல் முறைகளும் அதனுடன் சம்பந்தபட்டவர்களின் அணுகுமுறைகளுமே காரணம்!

சமையல் உணவு – எப்படி என்ன செய்ய வேண்டும்..?

உணவை நாம் எமது கையால் எவ்வளவுக்கு எவ்வளவு தயாரிக்கின்றமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை அதிக உயிரோட்டமாகின்றன.சமையலுக்கு தேவையான விறகுகளை அழகாக கொத்தி வைக்கின்றீர்கள்,அடுப்பில் விறகுகளை வைத்து தீ மூட்டுகின்றீர்கள்,சமையலுக்கு தேவையானதை ஒவ்வொன்றாக ஓரிடத்தில் ஆர அமர்ந்து செய்ய வேண்டும்.சமையலில் போதுமான முயற்சியும் நேரமும் கொடுக்கும் போதே அவை அதிக உயிரோட்டம் பெறுகின்றன.இத்தகைய முயற்சியை நாம் துறந்து இயந்திரமான சமையலை செய்வதால் வாழ்வின் சமையல் உணவால் கிடைக்கும் இன்பங்களை இழக்கிறோம்,அந்த உயிரோட்டத்தை தவறவிடுகிறோம்… அடிப்படை இயக்கும் சக்தியான உணவு சீர்கெடும் போதும் அங்கே மொத்த இயக்கமும் சீர்கெடுகின்றது.

உலகில் நம்மை சுற்றி நடப்பவற்றில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நேரம் கொடுக்கிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை உயிரோட்டமாக இருக்கும்.

எங்கே எப்படி ஆரம்பிப்பது..?

உங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்து உங்கள் வாழ்க்கையை சரி பண்ண தொடங்குங்கள்.அதுதான் சரியாக இருக்கும்.சமையல் அறை விறகில் சமைக்க கூடியதாக முடிந்தவரை மரபு கட்டிட முறையில் கட்டி கொள்ளுங்கள்,இல்லையென்றால் இடித்து கட்டி கொள்ளுங்கள்.நின்ற நிலையில் அவசரமாக சமையல் செய்யும் இன்றைய சமையல் அறை உள்கட்டுமானங்களை முழுமையாக தவிர்த்துவிடுங்கள்,

மனிதர்களின் அசெளகரியத்தின் மறுபக்கத்தில்தான் மகிழ்ச்சியும் அபரிமிதமான வாழ்வும் இருக்கின்றது.

இருந்த நிலையில் விறகால் சமைக்க கூடியவாறு சமையலறையை வடிவமைத்து கொள்ளுங்கள்..காற்றோட்டமாக மேற்கூரை சற்று உயரமாக,போதிய இடவசதி கொண்ட மண்ணாலான/மண் டைல்ஸ் [Brick mud tiles] சமையல் உபகரணங்களை முடிந்தளவு மண் சட்டிகள்,ஓலை பெட்டிகள் என இயற்கையாக வைத்து கொள்ளுங்கள்.. அவற்றை வீட்டில் நீங்களாக செய்து கொள்ளுங்கள் [10 வருடங்கள் முன்னர் வரை எம் பாட்டிகள் அவற்றை தாங்களே செய்து வந்தனர்]

சமையல் செய்யும் உணவுகள் முடிந்தவரை சிறுதானிய உணவுகள்,உங்கள் மண்ணில் சொந்தமாக இயற்கையாக விளைவித்த மரக்கறிகள் எனவும் செயற்கை சுவையூட்டிகள் பாவனையற்றதாகவும் பார்த்து கொள்ளவேண்டும்.

இவ்வாறாக சரியாக சமையலறையை உருவாக்க தெரிந்து பெண்கள் சமையலை சரியாக செய்வார்கள்,குடும்ப நன்மை,அதனூடாக சமூக நன்மை,உலக நன்மைகளை மனதில் வைத்து உணவு ஊடாக அவரவர் குடும்பங்களுக்குரிய சக்தி செலுத்தப்பட்டு கொண்டிருக்கும்,பல குடும்பங்கள் இணைந்து சமூகமும் பல சமூகங்கள் சேர்ந்து நாடும் பல நாடுகள் சேர்ந்து உலகமும் சரியாக இயங்கி கொள்ளும்.இவ்வாறாக மொத்த உலகத்துக்குரிய இயங்கியல் சமையலறை,உணவு,அதாவது ஒரு இலட்சிய பெண்ணிலிருந்தே பிறக்கின்றது…

இதனை தவிர்த்து.. வேகமான நவீன சமையல்களும்,கவன குறைவான சமையல்களும் இயந்திரதனமாக சக்தியை மனிதர்களுக்கு கடத்தி விடுகின்றன.இந்த சக்தியை பெற்று கொள்ளும் குடும்ப சமூக மனிதர்கள்,இயந்திரங்கள் போன்ற குடும்ப,சமூக உலக வாழ்வினுள் கட்டுபட்டு கிடப்பார்கள்.அங்கு உயிரோட்டம் கேள்விகுறியாகி விடுகின்றது.இதற்காக சொல்லப்படுகின்ற காரணங்கள் மிகவும் அற்பமானவை… உயிரோட்டத்தை இல்லாத வாழ்வு அர்த்தமற்றது..இதனை கட்டமைக்கும் பொறுப்பு சமையலறையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.மனிதர்களுக்கு உயிரை கொடுத்து படைக்கும் இலட்சிய பெண்களால்தான் இது முடியும்!

தொடரும்…

வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை

மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கி கொண்டனர்.

மனித இனம் பெருக பெருக உலகத்துடனான தொடர்புகள் பெருக,வியாபாரம் பெருக… இவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.ஆரம்ப காலங்களில் மனிதன் அறியாமலேயே சூழலில் இருந்த,கிடைத்த பொருட்களை வைத்தே வீட்டை உருவாக்கி கொண்டான்.இது சூழலுக்கு உகந்ததாக இருந்தது.ஆனாலும் பின்னராக உலக வரலாற்று,சமூக மாற்றங்களினால் சிறை வைக்கப்பட்ட மனித மனத்தை பயம் ஆட்கொண்டது.

அடிப்படை தேவையான வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்,அப்படி மனித மனங்கள் நினைப்பதில் தவறில்லை.ஆனால் அவை மனிதர்களை அவர்களே சிறை வைக்குமளவுக்கு அவர்களுக்கு எதிராகவே பயன்படகூடாது.இதற்கு உண்மையில் பாதுகாப்பு என்றால் என்ன என்று தெரிய வேண்டும்..? சூழலை அழித்து,மாற்றங்களை உண்டு செய்தி சமநிலையை குழப்பும் வகையில் நாம் வீட்டு கட்டுவது ஒருநாளும் நமக்கு பாதுகாப்பாக அமையாது.

எங்கே நாம் பிழை விடுகிறோம்? நாம் கட்டும் வீடு நிறைய காலம் இருக்க வேண்டும் என்று நினைப்பதுவே முதல் பிழை! உதாரணமாக வீடு நிறைய காலம் இருக்க வேண்டுமென்று நினைத்து நாம் பாவிக்கும் சூழலுக்கு ஒவ்வாத சிமெந்து கலவைகள் மற்றும் இதர நவீன கட்டிட நிர்மாண பொருட்கள் ஒவ்வொன்றுமே சூழல் சமனிலையை குழப்பி விடுகின்றன.அவை வீட்டின் ஆயுள் காலத்தை சற்று அதிகரிக்கலாம்.

ஆனால் மனிதர்களின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும்,சூழலை எம்மால் தனியாக அழிக்க முடியாது ஆனால் நாம் ஒவ்வொருவரும் தனிதனியாக சூழல் சமனிலையை குழப்பும் போது அது எல்லாம் ஒன்று சேர்ந்து மிகபெரிய ஒரு சமனிலை குழப்பத்தை சூழலுக்கு/இயற்கைக்கு ஏற்படுத்தும்.அந்த குழப்பத்தை மீண்டும் சூழல் சமனிலைபடுத்தும் போது உருவாகும் விளைவுகள் மனித இனத்துக்கு தீங்காக தெரிகின்றன.ஆனால் அவை சூழலுக்கு/இயற்கைக்கு நல்லவை.

உலகம் ஒரு அற்புதமான பஞ்சபூத கலவை,நிலம் நீர் காற்று ஆகாயம், நெருப்பு என அதன் விஞ்ஞானம் மனித இனத்தால்,அறிவியலால் முழுமையாக புரிந்து கொள்ளப்படகூடியது அல்லது.ஆனால் இயற்கையுடன் நாம் ஒன்றிணைந்து வாழும் போது நமக்கு அவை புரிந்துகொள்ளப்பட்ட வேண்டிய தேவை ஏற்படாது.இயற்கையை விட்டு விலகும் போதே நமக்கு அவற்றை புரிந்து கொள்ளவேண்டிய தேவை ஏற்படுகின்றது,காரணம் இயற்கையை பார்த்து அதிலிருந்து பிரதியெடுத்து தற்காலிகமாக செயற்கையை உருவாக்கி கொள்கிறோம்.அதனை நாம் நமது ego மொத்த வெளிபாடாக மனித இனம் பார்க்கின்றது.இயற்கையை தாண்டி எம்மாலும் செய்ய முடியும் என்று சவால்விடுகின்றது.

இதிலும் இயற்கையே தன்னை குறிப்பிட்ட காலத்தின்/யுகங்களின் பின்னர் மனித இனத்துக்கு வெளிப்படுத்தி செயற்கையை படைக்க மனிதனுக்கு உதவுகின்றது.காரணம் இருக்கலாம் அது தன்னை புதுபிக்க/(அழித்தல் மூலம்) மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்தலாம்.ஆனாலும் மனிதர்களை வேர்களை/அடிப்படைகளை இயற்கை எப்போது தனது காலுக்கடியிலேயே வைத்து கொண்டுள்ளது.நாம் இயற்கை என்பது பொன் முட்டை இடும் வாத்து என்றால் சில முட்டை கள் வந்ததும் வாத்தை கைவிடுவது புத்திசாலிதனம் இல்லை.

பிரபஞ்சத்தில் எங்கு எப்படி உருவானோம்,எங்கோ போய்கொண்டிருக்கிறோம்,பூமி பந்தில் தனித்து விடப்பட்டுள்ளோமா என்று எத்தனையை ஏக்கங்களை வைத்து கொண்டே நவீன அறிவியல் தட்டுதடுமாறி பயணிக்கின்றது.அறிவியல் தட்டுதடுமாற காரணம் அது முழுமையானது இல்லை என்பதே,அதனாலேயே அது மாறிகொண்டே இருக்கின்றது.ஆனால் முழுமையான இயற்கை மாறாமல் அமைதியாக இயங்கி கொண்டுள்ளது. அறிவியல் இரைச்சல்களில் சிக்கி சீரழியாமல் இயற்கையின் அமைதியை உணர்வதே இருக்கும் ஒரே வழி! இரைச்சல்களை கேட்டு பழகிய மனித இனத்திற்கு அமைதியை கேட்க முடியாது உணர மட்டுமே முடியும் என்ற உண்மை புரியவே இன்னும் சில வருடங்கள் தேவைப்படலாம்.

தொழில் மேன்மைக்கான வழிகாட்டி பகுதி I

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை உலக தரத்தில் உங்களால் செய்ய முடியும்.

மனிதர்கள் வேலை குறித்து சலிப்பு அடைவதை தாண்டி அவற்றை இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று கவனம் செலுத்துவதே அவர்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி வளர செய்வதற்கான செயன்முறையாகும்.

என்ன வேலை செய்கிறோம்,அது உலகத்தோரால் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை எல்லாம் கவலைப்படாமல் அவற்றில் கவனத்தை குவிக்காமல்,முழு கவனத்தையும் நீங்கள் செய்யும் வேலையின் நிகழ்கணத்தில் குவியுங்கள்.நீங்கள் செய்யும் வேலை மேம்படும்,அது துப்பரவு தொழிலாளியோ அல்லது ஜனாதிபதி வேலையோ எதுவாகினும் வேலை என்ன என்பதிலோ அதை யார் செய்கிறார்களோ என்பதில் எதுவும் இல்லை.அந்த வேலை எப்படி செய்யப்படுகின்றது என்பதை வைத்தே அளவிடப்படுகின்றது.

உங்களின் சிறிய கடையை நீங்கள் ஒரு அரசு நாட்டை நிர்வகிப்பதை விட,ஒரு பெரிய கம்பனி முதலாளியை சிறப்பாக கூட நிர்வகித்து கொள்ளலாம்.சீரான ஒழுக்கம்,கவன குவிப்பு மூலம் இவற்றை நீங்கள் இப்போது இருக்கிற இடத்தில் செய்கிற வேலையில் இருந்தே இக்கணத்திலேயே அடைந்து கொள்ளலாம்.அப்படி உங்களை நீங்கள் வளப்படுத்தி கொள்ளும் போது உங்கள் தோரணை உங்களை அறியாமலேயே ஒரு நாட்டு அதிபர் அளவுக்கு மாறி போயிருக்கும்.நீங்கள் அதற்கு தகுதியானவர்தான்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்டு கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமது படிப்பு செலவை கல்லூரி ஏற்கும் என்றால் கல்லூரி துப்பரவு தொழிலாளியாக பணிபுரிய தயாராக இருப்பதாக கூறி அந்த வேலையை செய்தார். பின்னர் மாணவர் ஒன்றிய தலைவராகி நாட்டுக்கே அதிபர் ஆனார்.

அவர் துப்பரவு செய்த வேலையும் ஏதோ வந்துவிட்டோம் என்று வேலை செய்யும் ஒரு புலம்பெயர்ந்த தமிழரோ,ஆபிரிக்கரோ,அயல் தேசத்து இளைஞரோ செய்யும் வேலையும் ஒன்றா..? வேலை ஒன்றுதான் ஆனால் அந்த வேலையை செய்த விதம் வேறு! அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு உலகிற்கு தெரிந்த அவரின் திறமைகள்,அவர் துப்பரவு தொழிலாளியாக இருந்த போது கற்றவையும் சேர்த்துதான்.அவர் அப்போதே அமெரிக்க ஜனாதிபதி மேசை துடைப்பது போலவே உணவக மேசைகளை துடைத்து வந்தார்.

இங்கு கூலி தொழிலோ அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தொழிலோ செய்யப்பட்ட வேண்டிய விதம் ஒன்றுதான்..அந்த விதத்தில் அவரவர் வேலையை செய்வதன் மூலம் கூலி தொழிலாளியும் அமெரிக்க அதிபராக முடியும்.

என்ன செய்கிறோம் என்பதை விடுத்து செய்யும் வேலை எதுவாகிலும் அதன் மீது நிகழ்கணத்தில் கவனத்தை குவித்து ஒரு ஒழுக்கத்துடன் செய்து வரும் போது அது உங்களை உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.அதற்காக எல்லோரையும் நாட்டு அதிபராகுமாறு சொல்லவில்லை.உங்களுக்கு நீங்கள் ராஜாவாக இருந்து கொள்ளுங்கள்.. இதன் மூலம் இருப்பதில் பெரிய இடத்தையும் கீழே உள்ள துப்பரவு தொழிலையும் ஒப்பிட்டு செய்யும் முறையில் அவை எல்லாமே ஒன்றுதான் என்று கூறுகிறோம்.

துப்பரவு தொழிலாளியிலிருந்து நாட்டு அதிபர் ஆவது அப்படி வந்தவர்களை தவிர அனைவருக்கும் அதிசயமாக தெரியும் ஆனால் அப்படி வந்தவர்களுக்கு அது அதிசயமில்லை,துப்பரவு தொழிலோ/நாட்டு அதிபர் வேலையோ அவர்களுக்கு ஒன்றுதான்.எந்த வேலையாக இருந்தாலும் நிகழ்கணத்தில் ஒழுக்கத்துடன் ஒருமித்த கவனம் செலுத்துகிறார்கள்.அவர்கள் அவ்வளவுதான் செய்கிறார்கள். இரண்டையுமே சரியாக செய்யாதுவிடின் அந்த இடத்தில் இருப்பவர்கள் மூக்கை பொத்தி கொண்டுதான் இருக்க வேண்டும்.

நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் சம்பந்தப்படும் நீங்களும் அந்த வேலை எவ்வாறு செய்யப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது..கவனத்தை அதில் குவிக்க தொடங்குங்கள்…

காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்

0

நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று வரிசையாக நேரத்தை மிச்சப்படுத்த என்று பயன்படுத்த தொடங்கியவைதான் இன்று அவர்களின் நேரத்தை விழுங்கி கொண்டுள்ளன.

உண்மையில் நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா..? இல்லை..காரணம் நேரம் என்று ஒன்று இல்லை..அது பல்வேறு தளங்களில் அதிர்ந்து இயங்கி கொண்டிருக்கும் பிரபஞ்ச ஆற்றலில் உண்டான மாயையின் பக்க விளைவு பொருள். நீங்கள் இயற்கை கொஞ்சும் மலைகள்,சிறு மழை என ஒரு சூரிய உதயத்தின் போதும் சரி,மழலை குழந்தை சிரிப்பின் போதும் சரி,ஒரு தலை காதலியின் ஒரு நிமிட தரிசனத்திலும் சரி,பிடித்த இயற்கை உணவை உண்ணும் போதும் சரி,மரநிழலில் இருக்கும் போதும் சரி உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் சரி,தியானம் செய்யும் போதும் சரி தேசத்திற்காக போராடும் போது சரி…உங்கள் உழைப்பை 100% கொடுக்கும் போதும் சரி,மாலையில் வியர்வை சிந்தி விளையாடும் போதும் சரி,பிடித்த நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி நீங்கள் நேரத்தை மறந்து போயிவிடுவீர்கள்.அங்கு நேரம் கொல்லப்பட்டுவிடும்,அதாவது T=0 நேரம் காணாமல் போகின்றது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லப்படும் உலக இயங்கியலும் இயற்கையில் இருந்து கற்றதை கொண்டு இயற்கையை வேலை தாண்டி நாம் அதனை செய்ய வேண்டும் என்ற அகங்காரம் மனித இனந்திற்கு ஏற்படுள்ளது.இதனால் நேரத்தை காணாமல் போக செய்யவே ஏதோ ஏதோ எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்லி கொள்கிறார்கள் ஆனாலும் அவர்களை இதுவரை அதில் வெற்றி பெறவில்லை.

உதாரணத்துக்கு நீங்கள் தொலைதூர விமான பயணம் தற்போதைய வளர்ச்சியில் சில மணி நேரத்தில் பூமியின் எப்பாகத்தில் இருந்து எப்பாகத்திற்கும் போய் வரலாம் . ஆனால் அதை செய்யும் போதும் அல்லது குறிப்பிட அந்த செயற்பாடுகளுக்கு தயாராகும் போதான மனழுத்தம் அதனை சுற்றியுள்ள அழுத்தம்,இந்த நேர குறைப்பிற்காக விஞ்ஞானம் வளர்ந்ததை திரும்ப கீழே தள்ளி இதனால் உண்டான மன அழுத்ததிற்கு மருந்து கண்டுபிடிக்க இயற்கை அவர்களை அனுப்பி விடும்.

இன்னொரு உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரம் எடுக்கும்,ஆனால் இதே வேகமாக குறைந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்று நீங்கள் நேர்ந்தெடுக்கும் போக்குவரத்து முறையில் உங்கள் உயிரை இழக்கும் சந்தர்ப்பங்களும் காணப்படும்.நேரத்தை மிச்சப்படுத்தும் போரில் வீதி விபத்துக்கள் அதிகரித்து அவற்றை சமபடுத்தி விடுகின்றன.

நோய் மரணங்களை தடுக்க விஞ்ஞானம் மருந்து கண்டுபிடித்தால்,ஒரு பக்கம் நோயாளிகள் காப்பற்றப்பட்டாலும் இன்னொரு பக்கம் மருந்தின் பக்கவிளைவுகள் நோயாளிகளை காவு வாங்கி கொள்ளும்.போருக்கு பிள்ளையை அனுப்பாமல் வெளிநாடு அனுப்பினால் பணம் அதிகமாக உழைத்து இருக்கலாம் ஆனால் அதே பணத்தால் நான்கு சொந்தம் சண்டை போட்டு பிரிந்து இருக்கும்,அதே வீட்டு பிள்ளைகள் சோம்பேறிகளாகி கெட்டு குட்டிசுவர் ஆகியிருப்பார்கள்.

நிறைய காலம் இருக்க வேண்டும் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ள சீமெந்துகளை போட்டு இயற்கை சமனிலையை புறக்கணித்து வீட்டை கட்டலாம்,ஆனால் அவற்றால் வீடுகள் உள்ள உலகத்தின் ஆயுள் குறைந்து போய்விடும்! அல்லது சீமெந்து வீட்டு வெட்கை பிள்ளை பிறக்காமல் சந்ததியை அழித்து விடும்,பெயின்ட் போன்ற பல இராசயனங்கள் நோய்களை உருவாக்கி கொன்றுவிடும்.ஆக மொத்ததில் அதிக காலம் இருக்க வேண்டும் என்று வீட்டை கட்டலாம்,ஆனால் வீட்டை பார்க்க நீங்கள் அதிக காலம் இருக்கமாட்டீர்கள்.

நீங்கள் அதிக காலம் இருக்க வீட்டின் ஆயுள் காலம், நீங்கள் செய்யும் வேலைகளின் காலத்தை குறையுங்கள்,உதாரணமாக உங்கள் மூச்சு எடுக்கும் காலத்தை நீங்கள் குறைக்கும் தியான முறை உங்களை அதிக காலம் நோய் இல்லாமல் வாழ வைக்கும்,உங்கள் மனதை காலத்தின் மாயையில் இருந்து விடுதலை பெற உதவும்! சாப்பிடும் போது மெதுவா சாப்பிடுங்கள் இலகுவாக செமிபாடு அடையும்.நோய்கள் அண்டாது.வாசிக்கும் போது பேசும் போதும் நடக்கும் போது வாகனங்களை ஓடும் போதும் அதற்கு கொடுக்கும் கால மாத்திரையை குறையுங்கள் உங்களின் மன இறுக்கம் காணாமல் போய்விடும்.நேரத்தை குறைக்க என்று சென்ற நவீன உலகத்தின் மிகப்பெரிய வியாதியாக மன இறுக்கம் மாறியுள்ளது.மனம் இறுகினால் பின்னர் எல்லாமே இறுகிவிடும்.

Fast food,hybrid seeds என நேரத்தை மிச்சப்படுத்த என்னத்தை மனித இனம் ஆரம்பித்தாலும் அவர்கள் ஆரம்பிப்பதிற்குள்ளேயே அதற்கான வெடியை அதாவது நேர கணிப்பு குண்டை இயற்கை வைத்து விடுகின்றது…ஒரு பக்கம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக மனித இனம் ஓடிக்கொண்டிருக்கும் போது அந்த குண்டு வெடித்து அவர்களை தொடங்கி இடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.ஆக இயற்கை எதிரான போராட்டத்தில் மனித இனம் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது.

இன்று விஞ்ஞானத்தின் உச்ச வளர்ச்சி என்று பீற்றி கொள்ளும் பாடமாக்கி பாஸ் பண்ணிய படித்த வர்க்கம் மனித இனத்தை செவ்வாய்க்கு கொண்டு செல்ல போகிறோம் என்கிறார்கள்.காலம் அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விடுகின்றது ஒன்று பூமி அழிய போகின்றது அல்லது செவ்வாய் பூமியானல்,பூமி செவ்வாயாக போகின்றதா என்று!

இல்லாத நேரத்தை இல்லாமல் செய்வதுதான் இலக்கு அதற்கான வழி இயற்கை நோக்கியே இருக்கின்றது.ஆனால் மனித இனம் அதற்காக எதிர்திசையில் செல்கின்றது.செல்ல வைக்கப்பட்டு கொண்டுள்ளது.இயற்கை தனது பக்கம் zero வைத்து கொண்டு எதிர்திசையில் முடிவிலியை வைத்துள்ளது.ஆக விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் இயற்கை பக்கமாக திரும்பி நடப்பதுதான் புத்திசாலிதனம்.இல்லையெனினும் எப்படியும் எங்கு சுத்தியும் கடைசியில் இயற்கையிடம்தான் வரவேண்டும்.

தணியாத விடுதலை தாகங்கள் : தளராத துணிவோடு…

0

ஆதியிலிருந்து அந்தம் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை விடாமல் மனித மனம் விடுதலையை தேடியே அலைபாய்ந்தவாறு உள்ளது.இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் விடுதலையை நோக்கியதாகவே உள்ளது.தன்னை சுற்றியுள்ள சகல கட்டுக்களிலிருந்தும் வெளியில் வருவதே மனித இனத்தின் மகத்தான இலக்காக இருக்கின்றது.இது வெளியில் அவசரமாக சுழன்று கொண்டிருக்கும் நனவு மனதுக்கு அதிகமாக தெரிய வாய்ப்பில்லை.

எனினும் மனித உள்ளுணர்வு இதனை மனிதன் நினைக்கும்,செய்யும் ஒவ்வொரு செயலிலும் எதிரொலிக்க வைக்கின்றது.மனித மனம் தற்காலிக இன்ப துன்பங்களில் தன்னை குவித்து இயங்கிகொண்டுள்ள போதிலும்,மனதினால் உருவாக்கப்பட்ட காலத்தினை கொண்டே அத்தனையையும் அளவிடுகின்றது.இன்ப துன்பங்களை பற்றி காலத்தினை அடிப்படையாக கொண்ட மனித மனங்களின் அளவிடுகள்தான் மதங்களை படைத்து,சொர்க்க நரகங்களையும் படைத்தது.உண்மையில் மனித மனதுக்கு சொர்க்க நரகங்கள்தான் தேவைப்படுகின்றன.

அதை அடைய வழிகளாக மதங்களை அது படைத்திருக்கின்றது.மதங்களை படைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் நனவு மனதுக்கு தோன்றினாலும்,அதற்கு நிலையாக தேவைப்படுவது என்னவோ சொர்க்க,நரகங்கள்தான்,மனங்கள் இரண்டு வகையில் இயங்குகின்றன,ஆனால் இரண்டின் இலக்கும் ஒன்றுதான்,ஒன்று சொர்க்கத்தை நேராக அடைவது,இன்னொன்று இல்லாத நரகத்தை எதிர்மறையாக கருதி எதிர் இயங்குதல் மூலம் சொர்க்க நிலையை அடைதல்,சொர்க்கம் என்பதன் அர்த்தம்

மனித மனதினை ஆழும் ஆன்மா காலத்தை கடந்து வாழுதல்,நரக நிலை என்பது தொடர்ந்து காலத்துக்குள் ஆட்படுதல்.சொர்க்க நரகத்தை இறுதி இலக்காக மனித மனம் வைத்துள்ளது இந்த நிமிடத்தில் இருக்கும் மகிழ்ச்சியை எப்படி நிலையான மகிழ்ச்சியாக மாற்றுவது என்பதே காலத்துக்கு உட்பட்டு இயங்கும் மனித மனதின் இலக்காகும்,அந்த இலக்கை அடையும் பொருட்டே அது தொடர்ந்து பல பொருட்களை தாண்டி பல உடல்களினூடு பயணித்து கொண்டே இருக்கும்…

விடுதலை உணர்வு என்பது இறுதி ஆன்ம விடுதலை பற்றிய உள்ளுணர்வாகும்.இது அனைவருக்கும் உள் இருந்து இயக்குகின்ற போதிலும் காலத்திற்கு ஒருவர் எவ்வளவு அடிமையாக இருக்கின்றார் என்பதை பொறுத்து அந்த உணர்வு கூட,குறைவாக காணப்படும்.கூடுதல் குறைதல் என்பதன் கருத்து இங்கு எதுவும் உண்மையில் தனிதனியாக இல்லை கூடி குறைவதற்கு,உலகில் நிலத்தை சுற்றியிருக்கும் கடல் அனைத்தும் ஒன்றாக இணைந்திருப்பது போலவே இதுவும்.விடுதலை உணர்வு எங்கும் சூழ்ந்து காணப்படுகின்றது.

அவற்றை திறந்த மனதுடன் அணுகுபவர்களுக்களின் ஊடு அது பாய்ந்து உலகில் தனது கருத்துலகத்தை தொடர்ந்து பரப்புகின்றது.உலகின் மொத்த நீரில் அதிகமான சதவீதம் உப்பு நீராக இருக்கின்ற போதும் அதிலிருந்து 1% குடிநீர் உருவாகுவது போலவே,இந்த விடுதலை பேருணர்வும் அதிகமான அடிமைகளை உலகம் முழுக்க கொண்டு அதிலிருந்தே விடுதலை வீரர்கள் உருவாகின்றனர்.உலகில் 99% மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கான ஒரே காரணம் பயம்,

மனிதர்களின் அத்தனை பயங்களுக்கும் காரணமாக அமைவது மரண பயமாகும்,அவ் மரண பயத்தை வென்றுவிடுபவனால் மட்டுமே பரிபூரண விடுதலையே வென்றெடுக்க முடியும் என்பது மாபெரும் விடுதலை தத்துவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை,மேலும் விழிப்புணர்வே விடுதலைக்கான முதல்படியாக இருக்க முடியும் என்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஆளும் கருத்துலகினால் அடித்து விழுத்தப்பட முடியாத ஒன்றாக இருக்கின்றது.

உலகியல் தொடர்பான இரக்கம்,துன்பம்,கண்ணீர் என்பன ஒருவனின் அறியாமையின் அடையாளங்கள்,மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் பிரபஞ்சத்தின் முக்குணங்களால் தாக்கமடைந்து மாசு அற்றதாகின்றது.நீங்கள் எதை செய்தாலும் நன்மையே,எது எங்கு நடந்தாலும் பிரபஞ்சம் அதற்கு இறுதியில் நன்மை வடிவம் கொடுத்தே செயல்படுத்துகின்றது,இதை கீதையில் அழகாக சொல்லியிருப்பார்கள்,”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,எது நடக்கின்றதோ,அதுவும் நன்றாக நடக்கின்றது,

எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்றும் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வது இதற்காகதான்,பலன்களை ஒன்றுக்கொன்று உள்இணைப்பினால் நடப்பவை,அவற்றை உங்களால் கையாளமுடியாது என்பதனாலேயே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று உங்களுக்கு கூறப்படுகின்றது.வேதங்களின் அடிப்படை வேதமான ரிக் வேதம் ஒட்டு மொத்த சுலோகங்களும் சேர்ந்து உரத்து சொல்வது இதை மட்டுமே,”செய்” என்ற ஒரு வார்த்தையினுள் அத்தனையையும் அடக்கிவிடலாம்,நன்மை தீமை என்று இங்கு எதுவும் இல்லை,,நன்மை தீமை என்பது மனக்கணக்கு,மனம் என்பது மாயை,நிரந்தரம் இல்லாத ஒன்று.அதனை நம்பி நிலையில்லாமையில் உழல்வது பாவம்.

ஒருவன் தான் ஏன் வருந்துகின்றேன் என்பதை விசாரணை செய்யாமல் காலத்தை கழிப்பானாயின் அவன் நிறைவுள்ள மனிதனாக மாட்டான்.ஒருவன் மனதில் நான் ஏன் வருந்துகிறேன் என்ற விசாரணை தொடங்கும் போதே அவன் தன் வாழ்க்கையை வாழத்தொடங்குகின்றான்,நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் ஆளப்படுபவர்கள்,நாம் உடல்களால் கட்டுப்பட்டு உறவு நிலை பந்தங்களால் பிணைக்கப்பட்டு இருக்கின்றோம்,

எனினும் ஒவ்வொரு தனியனின் இதயத்திலும் இப்பிணைப்புக்களை உடைத்து பூரண சுதந்திரத்தை பெறுவதற்கான விடுதலை என்ற விதை விதைக்கப்பட்டே உள்ளது,பரமாத்தவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் தாங்கள் மாற்றமில்லாத ஒரு பெருஞ் சக்தியை சுற்றி மாற்றமடைந்தவாறு உள்ளோம்,மாற்றமடையும் உடலுக்கு நிலைக்கும் தன்மை இல்லை,மாறாத ஆன்மாவுக்கு அழிவு இல்லை இந்த பிரபஞ்சம் முழுவதும் இவ்வாறே மாறாத ஒன்றை பற்றி மாற்றமடையும் செயல்முறையை நடந்தவாறு உள்ளது,

அழிவற்ற ஆன்மாவை எவராலும் அழிக்கமுடியாது,நீங்கள் அனைவரும் அழியாத ஆத்மாக்கள்,அழியப்போகும் உடம்பை நினைத்து கலங்க வேண்டியதில்லை,உனக்கு விதிக்கப்பட்ட கடமையை சரிவர செய்வதை விட மேலான சிறந்த தர்மம் ஒன்றில்லை,பலனை எதிர்பார்த்து கடமையை செய்வதற் மூலம் நாம் பாவங்களை பெற்று கொள்கின்றோம்,காரணம் இங்கே நன்மை கலவாத தீமையுமில்லை,தீமை கலவாத நன்மையுமில்லை,ஆத்மாக்களை தாங்கி நிற்கும் உடல்களே அழிகின்றன,ஒரே புத்தி,ஓரே செயல் கொண்டு கடமையை செய்,எவன் எதிலும் பற்றுஅற்றவனாக நன்மை வந்த பொழுதும் தீமை வந்த பொழுதும் கலங்காமல் இருக்கிறானோ அவனுடைய அறிவு நிலையானது,கோபத்தினால் மனக்குழப்பம் ஏற்படுகிறது,மனக்குழப்பத்தால் ஞாபகமறதி ஏற்படுகின்றது,ஞாபக மறதியால் புத்தி நாசமும் புத்தி நாசத்தால் எல்லாமும் ஏற்படுகின்றது.

எனவே விழிப்புணர்வு கொண்டு உன்னையும் உன்னை சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவுகளை அறிந்து அதற்கு ஏற்ப உனது செயலை வடிவமைப்பதன் மூலமே விடுதலையை பெற்று கொள்ளமுடியும்,நீ ஒரு செயல் செய்து அதற்கு விளைவுகள் உண்டு எனில் நீ அதற்கு அடிமை,உனக்கு விடுதலை இல்லை என்று பொருள்,நாம் நினைப்பவை செயல்களாக பரிணமிக்கின்றன.

பலன்களுடைய சிந்தைகளே பலன்களை நோக்கி செயல்களை செலுத்துகின்றன.ஒவ்வொரு சிந்தனைகளிலும் நமது விழிப்புணர்வை செலுத்தும் போது அவை விழிப்புணர்வுடன் கூடிய செயல்களாக பரிணமிக்கின்றது.விழிப்புணர்வு நிலையும் பெருகி கொள்வதுடன் நமது சிந்தைகள் செயல்களை காலம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறிவதே விழிப்புணர்வின் அடுத்தபடி,அதை அறிவதன் மூலம் நாம் விடுதலையின் அடுத்த படியை நோக்கி அடி எடுத்து வைக்கலாம்…

பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I

0

உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால் அது ஒரு மனித உடலையும்,ஒரு உயிர் என்று அழைக்கப்படும். உள்ளுணர்வையும் கொண்டிருக்கும்,அந்த உள்ளுணர்வு பிறந்தற்கான நோக்கத்தை அடைய அந்த உள்ளுணர்வும் இந்த மனித உடலும் சேர்ந்து வேலை செய்யவேண்டிய தேவை ஏற்படுகின்ற போது இவற்றுக்கு தற்காலிக இணைப்பு பாலமாக மனம் என்ற ஒன்று உருவாகின்றது.

அண்டத்தில் இருக்கும் பேருணர்வு என்பது ஒரு நாளும் அளவில் தங்கியிருப்பதும் இல்லை அழிவதும் இல்லை.ஒவ்வொரு தனித்தனி உடல்களை எடுத்துகொண்டு மனங்களை உருவாக்கி அதனூடாக அது தன்னை தானே அனுபவித்துகொண்டிருக்கின்றது,இதுவே பிரபஞ்ச இயங்கியல் ஆகும்.

ஐம்பூதங்களினால் ஆன இந்த உலகம் என்று அறியப்படுவது அண்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.மனித உடலின் பருப்பொருட்களும் இதே ஐம்பூதங்களினாலே ஆனது.அண்டத்தில் வியாப்பித்திருக்கும் பேருணர்வே எல்லாவற்றையும் படைத்து நாம் பார்க்கும்,பார்க்கமுடியாத எல்லாவற்றுக்குள்ளும் உள்ளும் வெளியும் நிறைந்திருக்கின்றது.இங்கு பொருட்கள் இயங்கவில்லை.

அந்த பேருணர்வே இயங்கியவாறு உள்ளது,அதனை சார்ந்து அனைத்தும் ஒரே இயக்கத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள ஒவ்வொரு கணமும் முயற்சிகின்றன.எனினும் இயக்கத்தினால் உருவாகிய மனித உடலினால் உணரப்படும் காலத்தின் நெடிய பாதையில் கூட்டு பொருட்களினால் ஆனவை அனைத்தும் அழிவை சந்தித்து கொள்கின்றன.பேருணர்வை காலத்தை தாண்டி வாழ்வதால்தான் நாம் மரணத்தை காலமாகின்றது என்று குறிக்கும் பழக்கம் வந்திருக்கவேண்டும்.

பேருணர்வு தன்னை சுற்றி ஒரு ஐம்பூத படையை உருவாக்கி கொள்கின்றது. உலகம் ஒரு ஐம்பூத படையிலா சுற்றப்பட்டுள்ள பேருணர்வு,உடல்கள் அதே ஐம்பூத படையலால் சுற்றப்பட்டுள்ள பேருணர்வு,இங்கு எல்லாம் ஒன்றுதான்,அழிவில்லாத உணர்வும் அழியும் உடலும் இணைந்து பணியாற்ற வேண்டிய காலத்தில் உருவாகும் மனித மனம் இரண்டுக்கும் இடையில் இருந்து பணியாற்றுவதால்,அது இரண்டின் பாதிப்புக்கும் உள்ளாகின்றது.பகலில் அது உடலினால் அதிகமாக பாதிக்கப்படுவதால் அது தன்னை உடலின் ஒரு பாகமாக நினைத்து கொள்கின்றது.

இரவில் பேருணர்விலால் பாதிக்கப்படுவதால் அது தன்னை பேருணர்வின் ஒரு பாலமாக நினைத்து கொள்கின்றது.ஐம்புலன்கள் வழியாக உணரப்படுவதும் பேருணர்வின் ஒரு பகுதியே,ஆனால் அவை வேறு வேறு உடல்களினால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் வந்தவை.மனித உடலினுள் இருக்கும் உணர்வினால் கவரப்பட்டு அவை எமது உடலின் ஐம்புலன்களினூடு எடுக்கப்பட்டு மனம் என்னும் இணைப்பு பாலத்தை தாண்டி இரவில் நமது உணர்வை சென்று அடைந்துகொள்கின்றது.நாம் உடல் ஐம்புலங்களினால் உணரும் எல்லாம் அவற்றினால் பாதிக்கப்பட்டவைதான்.

ஐம்பூதங்களை படைத்த பேருணர்வுக்கும் ஐம்பூதங்களினால் ஆன உடலுக்கு இணைப்பு பாலமான மனம் பகலில் தனக்கு தேவையான அனைத்தையும் உடலினை கொண்டு படைத்து ருசித்து கொள்கின்றது.இரவானது பேருணர்வில் வந்து தானாக சரணடைந்து கொள்கிறது.மனிதன் பிறந்து இறக்கும் வரை மனிதன் தன் கிட்டதட்ட அரைப்பகுதி வாழ்வை தூக்கத்தில் கழிக்கின்றான்.

தூக்கம் என்பது பகல் முழுதும் உடலுக்காக இயங்கும் மனம்,இரவில் உடலை தூங்க வைத்துவிட்டு உள்ளுணர்வுடன் தொடர்புகொண்டு அங்கு வாழுகின்றது. ஐம்புலன்களின் மூலம் மனித மனதுக்கு தெரியாமல் எடுத்த பேரண்டத்திற்காக எடுக்கப்பட்ட அத்தனை தகவல்களையும் கடத்திவிடுகின்றது.அதை பெற்று கொள்ளும் பேரண்டம் தனிதனி நபருக்காக பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்துகின்றது.

நாம் நம்மை உடல் என்று நினைத்து வாழ்வை வாழ தேவையானதை எல்லாம் எமக்கு உருவாக்கி தருவதும் இதே உணர்வுதான்,இறந்து போகும் வரை எமக்குள் இருக்கும் உள்ளுணர்வு இதே ஐம்புலங்களை கொண்ட உடலை எமக்கே தெரியாமல் எமக்குள் இன்னொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும்..இங்கு எதுவும் ஆக்கப்படுவதில்லை,அழிக்கப்படுவதுமில்லை… அப்படியேதான் இருக்கின்றது…