Home Blog Page 103

பிரான்ஸில் பெருகி வரும் கொலைகள் கொடூரமான நிலையில் சடலம்!!

0

பிரான்ஸில் Rue des Fauvettes எனும் பகுதியில் நேற்று இரவு 9:30 மணியளவில் ஒரு 22 வயது இளைஞன் மோசமான நிலையில் முகத்தில் பலத்த காயங்கள் உடன் தெருவில் சடலமாக விழுந்து இருப்பதைக் கண்டு அவசர சேவைக்கு அழைத்தனர்.இதை பற்றி பொலிஸ்சார் கூறியது. அவ் இளைஞனை நிர்வாணமாகிய நிலையில் அவரது உடல் மற்றும் முகத்தில் பல இடங்களில் அடித்ததாக கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தலையில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்டது என தெரியவந்தது. மேற்கொண்ட விசாரணை போது மரணத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை செவ்வாயன்று கைது செய்தனர்18 முதல் 21 வயதுடைய ஐந்து இளைஞர்கள், இந்த வியாழன் அன்று Évry (Essonne) இல் உள்ள ஒரு விசாரணை நீதிபதியின் முன் அழைத்து வரப்பட்டனர், அவர்கள் “கொலை, கடத்தல் மற்றும் தனிமைப்படுத்தல்” ஆகியவற்றிற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டபட்டனர். Rue des Fauvettes இந்த மாதத்தில் 5 வது கொலை எனவும் இந்த சம்பவங்களுக்கு பின்னால் மேலும் நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய குடிவரவு சட்டம் நடைமுறை!!

0

பிரான்ஸில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் journal official ஆல் புதிய குடிவரவு சட்டம் வெளியாகி உள்ளது. இந்த குடிவரவு சட்டத்தின் படி புலம்பெயர்ந்தவர்களின் வருகையை கட்டுப்படுத்துதளும் அவர்களின் நிலவுகையை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டது.

இதனை 5 விதமாக பிரித்து உள்ளனர். வேலையினை பொருத்த வரை உணவகம், கட்டிடங்கள்,வீட்டு வேலை பனி செய்பவர்களுக்கு வதிவிட விசா கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையினர்களுக்கு 4 வருட வதிவிட அனுமதி பத்திரம் வழங்கபடும். பிரான்ஸில் 2 மற்றும் 4 வருட வதிவிட அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு இனிமேல் A2 என்ற french மொழி புலமை இருக்க வேண்டும். பிரான்ஸில் இருந்து வெளியேருபவர்கள் இனி சுலபமாக வெளியேர இயலாது. இறுதியாக புலம்பெயர்ந்து வந்தவர்கள் குற்றங்கள் செய்து 3 இருந்து 5 வருட சிறை தண்டனை பெற்றவர் எனின் அவர்களின் வதிவிட அனுமதி பத்திரதை ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றம் செய்வார்கள்

பிரான்ஸில் தடைபட போகும் ரயில் பாதைகள்!!

0

நாளை RER B ரயில் பாதைகள் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனது தாக்கம் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியை அதிகம் பாதிக்கிறது.CGT-RATP ஏழு மாத வேலைநிறுத்த அறிவிப்பை முன்னரே தாக்கல் செய்தது. அரசாங்கதிடம் இருந்து பல நாட்களாக மேலதிக அறிவிப்பு வராததால் இன்று முழு RER B ரயில் லைன் முழுவதும் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அணிதிரட்டல் இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒரு பொதுக் கூட்டத்தில், SNCF RER-B வணிக முகவர்களால், CGT மற்றும் SUD RAIL ஆல் ஆதரவுடன், சம்பள உயர்வைக் கோரும் நோக்கத்துடன் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இரண்டு ரயில்கள் ஒன்று மட்டுமே RER B இன் வடக்கு நோக்கி இயங்கும், அதே நேரத்தில் நான்கில் மூன்று ரயில்கள் தெற்கை நோக்கி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும் Gare du Nord inter connection பொறுத்தவரை ரயிலில் எந்த மாற்றமும் தேவையில்லை. எனினும் இந்த வேலை நிறுத்தம் எத்தனை நாட்கள் தொடரும் என கூற இயலாது.

பிரான்ஸீல் 75 வயது தாத்தாவின் காம லீலைகள்!!

0

பிரான்ஸில் Haute-Loire எனும் பிரதேசத்தை சேர்ந்த 75 வயது காந்தவியல் நிபுணர்கு பாலியல் வன்கொடுமைகள் என்ற குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.இக் குற்ற சாட்டு 19 வயது இளம் பெண்ணால் இப் புகார் தாக்கல் செய்யப்பட்டது.

பொலிசார் மேற்கொண்ட விசாரனையில் தங்களுடைய பிறப்புறுப்பு மற்றும் மார்பைத் தொட்டதாக மேலும் 13 பெண்கள் தெரிவித்துள்ளனர். இத்துடன் மட்டும் இவர் காம லீலைகள் நிக்கவில்லை இவர் பணிபுரியும் இடத்திலும் மூன்று வாடிக்கையாளர்கள் மீது தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். என விசாரணையில் தெரியவந்துள்ளது.வன்முறை அல்லது வற்புறுத்தலின்றி தொடுதல் என்ற குற்றத்திற்காக Bui-en-Valé குற்றவியல் நீதிமன்றம், இவரை குற்றவாளி என்று அறிவித்தது.75 வயதுடைய இவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.

குறல் – நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.

பொருள் – நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காமத்துகாக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

பிரான்ஸ்: பரிதாப நிலையில் குழந்தையின் சடலம்!!! தாயின் முட்டாள்தனம்

0

பிரான்ஸில் Dordogne இல் உள்ள Bosset கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவர். திங்கட்கிழமை ஜனவரி 29 அன்று ஆறு வயது குழந்தை தனது காரால் தெரியாமல் நசுக்கப்பட்டு குழந்தை இறந்தது.அதிர்ச்சியில் இருக்கும் சிறுவனின் தாய்கு இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.

நடத்தப்பட்ட விசாரணையின் படி குழந்தையும் மற்றும் அவரது தாயார் பள்ளியிலிருந்து காரில் திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் தாய் ஓர் கடையில் இறங்கி உணவு வாங்க சென்ற வேலையில் காரில் இருந்து இறங்கிய சிறுவன் கார்கு, முன்னால் சென்று உள்ளான். தாயார்கு குழந்தை முன்னால் இருப்பது தெரியாமல் தாய் காரை முன்னேறி சென்றால். சிறுவனின் உடல் நசுக்கியதாக கூறப்படுகிறது.

Pellegrin உள்ள Bordeaux (Gironde) மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி மாலையில் உயிர் இழந்தான். இவ்வாறு பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்து இந்த வாரத்தில் இது இரண்டாவது மரணம்.

பாரிஸில் Tiktokல் பழகி பெண்ணை கழட்டி விட்ட தமிழ் இளைஞர்!

பாரிஸில் பேசிய திருமணத்திற்கு தயாராக இருந்த ஜோடி ஒன்று பிரிந்திருக்கின்றது.பெண் வீட்டார்களால் பார்த்து கட்டி வைக்க இருந்த நிலையில்,குறித்த மாப்பிள்ளை இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என நிறுத்தியுள்ளார்.

திருமண பொருத்தம் எல்லாம் சரியாக இருந்து ஜோடி மகிழ்ச்சியாக ஒன்றாக டிக்டொக் எல்லாம் செய்து மகிழ்ந்திருந்தது.ஆனாலும் விதி வேறு விதமாக விளையாடி பிரித்திருக்கின்றது.மாப்பிள்ளையின் தங்கை,தாயாருக்கு மரியாதை குடுக்கவில்லை என்ற குற்றசாட்டு முன்வைத்தே இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.பெண்வீட்டார் பேசி பார்த்தா போதும் கறாராக வேண்டாம் என முடிவாக கூறிவிட்டாராம்.இன்றைய காலங்களில் எல்லாம் வேகமாக நடக்கின்றன.சேர்வதும் பிரிவதும்

பாரிஸ்: கணவரின் நண்பருடன் ஓடிய தமிழ் பெண்!

பாரிஸில் கணவருடன் சேர்ந்து வேலைக்கு செல்லும் நபர் ஒருவருடன் மனைவி ஓடி சென்றுள்ளார்..மேலும் இது பற்றி தெரியவருவதாவது..கணவரின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஒருவர் என்றும்,அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

கணவர் கொஞ்சம் குடி என்றும்,நண்பரிடம் கணவர் குடியை பற்றி பேசி அவரை திருத்த முயன்றுள்ளார் , ஆனாலும் முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் குறித்த நபர் மீது விருப்பம் வந்துள்ளது,அதாவது கணவர் மீதான வெறுப்பு இன்னொருவர் மேல் விருப்பம் வர காரணமாகியிருக்கின்றது.அவர் திருமணமாகாதவர் என்று தெரிகின்றது.

இந்நிலையில்தான் மனைவி குறித்த நபருடன் சென்றுள்ளார்.திருமணமாகி 3 வருடங்கள் என்றும் பிள்ளை இல்லை என்றும்,கணவரும் பொறுப்பற்று திரிந்த நிலையில் குறித்த பெண் தனது வாழ்க்கை கருதி எடுத்த முடிவு தைரியமான ஒன்று..அதை முதலே தீர விசாரித்து பெற்றோர் கட்டி வைத்திருக்கலாம்.. சாதி பாக்கிறதில் இருக்கிற ஆர்வத்தை,மாப்பிள்ளை பழக்கவழக்கங்கள்,குடும்பத்துக்கு ஏற்றவரா என்பதில் காட்டுவது நல்லது.

Secrets of the Millionaire Mind | கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்

கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள் 

உலகில் சிலர் மட்டும் பணக்காரர் ஆவது பணக்காரர்கள் ஆக முடியாத மற்றவர்கள் காண்பதை, நினைப்பதை , நம்புவதை அதிகமாக சிறப்பாக செய்து யாரும் பணக்காரங்கள் ஆவதில்லை..மற்றவர்களால் பார்க்கமுடியாத,செய்ய இயலாதவற்றை செய்தே ஆகின்றனர்.

எண்ணங்களிலிருந்து விளைவுகள் எப்படி உருவாகின்றன,உங்களின் அக உலகம்தான் உங்களின் புறஉலகத்தை உருவாக்கும். உழைப்பதற்கான முன்னோக்கு , பணம் குறித்த உங்களின் கடந்தகால அனுபவங்கள்எல்லாவற்றையு் தாண்டி எவ்வாறு சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற இரகசியம்..

நீங்கள் நம்பி பெற்று கொண்ட தகவல்களின் தொகுப்புதான் உங்கள் அக உலகத்தைஉருவாக்குகின்றது.எண்ணங்களுக்கும் உங்களுக்குமான உறவு,நீங்கள் யார் என்ற உண்மை..? எண்ணங்களின்அதிகாரம்..! எங்கு எதுவெல்லாம் முக்கியம்..? உங்களின் பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவு! 

உங்களுக்கு நடக்கும  நல்லது கெட்டதுகள்..! பிரமாண்டமான சிந்தனை முறைகள்..கவனத்தை குவிக்கும்முறைகள்..! பணக்காரன் ஆவதற்கான அடிப்படை விதிகள்..! எங்கேயிருந்து தொடங்குகின்றது எப்படிசெல்கின்றது எங்கு சென்று முடிகின்றது என்று இந்த புத்தகம் விளக்கின்றது..

வெற்றியின் இரகசியம் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து ஓடுவதில்லை,மாறாக பிரச்சினைகளை விடஉங்களை பெரிதாக வளர்த்து கொள்வது.பிரபஞ்சத்துடனான கொடுக்கல் வாங்கல் விதிகள் எவ்வாறுதொழிற்படுகின்றது..? காரண காரியங்கள்..? மனிதர்களின் அடிப்படை உளவில் எவ்வாறு இயங்குகின்றது..? பயம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை 

பணக்காரன்,ஏழைகளின் பணத்தின் இடையிலான எண்ண விளைவு தொடர்புகள்…உடனடி திருப்தி Vs பொருளாதார சுதந்திரம்…

உலகில் ஏழைகள் எவ்வாறு உருவாகின்றனர் என்பதை அறிந்து அவர்கள் செய்வதை,அந்த செயல்களைதூண்டுகின்ற எண்ணங்களை தவிர்த்து கொண்டாலே நீங்கள் பாதி பணக்காரர் ஆகிவிடலாம்.. பணக்காரர்ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை..அது ஏழைகள் ஆகுவதை விட இலகுவானது…ஏழைகள் இன்னும்கஷ்டப்பட்டு தங்களை ஏழைகளாக்கி கொண்டுள்ளனர்.. பணக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலும்பணக்காரர் ஆக கொண்டுள்ளனர்..

ஏன் என்றால் இங்கு வழி ஒரு திசையில்தான் உள்ளது..அந்த திசையில் செல்ல செல்ல அபரிமிதம்அதிகமாகும்..எதிர் திசையில் செல்ல செல்ல ஏழ்மை அதிகமாகும்.

இந்த புத்தகம் வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு பொருத்தமான புத்தகம்..

The Secret | இரகசியம் | Book Review in Tamil

இரகசியம் – Book Roast 

பிரபஞ்சம் என்ற எல்லாவற்றையும் இணைத்து கொண்டு எல்லாத்தையும் கடந்த ஒன்றாகவும் இருக்கின்றஒன்றுக்கும் உங்களுக்குமான தொடர்புகளும்.. அவற்றுக்கிடையில் தொழிற்படும் கவர்ச்சி விசைகளால்அலைகழிக்கப்படும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி பிரபஞ்ச ஒட்டத்துடன்ஒத்திசைவான அபரிமிதமான ஒரு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் பற்றி இந்த புத்தகம்பேசுகின்றது.

முழுக்க முழுக்க அற்புதமான அதிசயமான அன்பான வாழ்க்கை ஒன்று இங்கு அனைவருக்குமே சாத்தியமானதுஎன்றும் உங்கள் உணர்வுகள்,எண்ணங்கள்,உடன்படிக்கைகள் , விழிப்புணர்வுகள் , விருப்பங்கள் என்பனஎவ்வாறு பிரபஞ்சத்துடன் உங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றது என இந்த புத்தகம் விளக்குகின்றது.

மகிழ்வான மனநிலையுடன் உணர்வுபூர்வமாக நீங்கள் நம்பி விரும்பும் விடயங்களை தொடர்ச்சியா உங்கள்மனகண்ணில் திரும்ப திரும்ப கண்டு வரும் போதும் கற்பனை செய்து வரும் போதும் அவை உண்மையில்உருவாகி உங்களுக்கு நிகழ் உலகில் கிடைக்கின்றன..

எப்போதுமே தொழிற்பட்டு கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி மூலம் பிரபஞ்சத்துக்கு உங்களின் ஆழ்மனவிருப்பங்களை அனுப்பும் போது அது உங்களுக்கு பதில் விடையளிக்கின்றது.இவை  தெரிந்தோ தெரியாமலோஉங்கள் வாழ்வில் நடைபெற்று கொண்டுள்ள ஒரு பிரபஞ்ச செயற்பாடுதான்.இது வரை நீங்கள் உங்கள்வாழ்வில் அடைந்த நல்லது கெட்டது எல்லாமே நீங்களாக மேற்கூறிய முறையில் பிரபஞ்சத்திடம் இருந்துதருவித்து கொண்டவைதான்.

பிரபஞ்சம் பற்றி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் அது உங்களுடன்இணைப்பில்தான் இருக்கின்றது.அந்த தொடர்புவெளிக்கு அப்பால் உங்களால் போக முடியாது.படைப்பின்மர்மம் அதுதான்.பிரபஞ்ச தாக்கத்துக்கு உட்பட்டே உங்கள் வாழ்வு இயங்குகின்றது அதன் விதிகள்தான்உங்கள் வாழ்வை ஆக்கி கொள்கின்றன,அழித்தும் கொள்கின்றன.

உங்களால் முடிந்தது எல்லாம் அவை தரும் அபரிதமான வாழ்வை பெற்று கொள்ளுவதுதன் மூலம் அதனைபுரிந்து கொண்டு ஏற்று கொள்வதுதான்.

இந்த உலகில் அற்புதங்கள் தினசரி நிகழ்வுகள்..ஒட்டு மொத்த அபரிமிதத்தால் இந்த உலகம் நிரம்பிவழிகின்றது.பிரபஞ்ச பேருணர்வோடு இணைந்து அதன் உள்ளிருக்கும் தங்குதடையற்ற போக்கோடு போவதும்அதனுள் இருக்கும் உலகில் உங்கள் ஆத்மாவை அடை காப்பதுமே உங்கள் வேலை.

இந்த புத்தகத்தை உங்கள் கையில் எடுத்து மனதுக்கு உங்கள் பிடித்த இடத்தில் ஆற அமர இருந்து படிப்பதன்மூலம் இதுவரை கடந்து போன உங்கள் வாழ்வில் நடந்து முக்கிய சம்பவங்கள் பற்றி தெளிவைஅடைவீர்கள்,அவை ஏன் எவ்வாறு எதற்காக நடந்தன என்ற உண்மையை உணர்வீர்கள்,இதனை வைத்துஉங்கள் நிகழ்கால வாழ்வை ஒழுங்கமைத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நிச்சயமாக்கி கொள்வீர்கள்..

இந்த புத்தகம் உங்களை தாண்டிய சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அது உங்களுக்குள்ளும்உண்டு,அதனிடமிருந்து விலகி ஓடாமல்,

அதனுடன் உங்களை ஒரு அங்கமாக்கி கொள்வதன் மூலம் அபரிமிதத்தை தினம் தினம் அனுபவிக்க முடியும்என்பதை உங்களுக்கு கற்று தரும்.

காலை எழுந்தவுடன் தவளை | Book Review

காலை எழுந்தவுடன் தவளை என்ற இந்த புத்தக தலைப்பு சிலருக்கு ஆரம்பத்தில் புரியாமல்இருக்கலாம்.ஆனால் எமக்கும் எமது இலக்குகளுக்கும் இடையிலான பயண நுணுக்கங்களை பற்றியும்துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையானவை பற்றியும் எளிமையாக அலசுகின்றது.

இன்று ஒரு நாள் காலையிலிருந்து  வர போகின்ற உங்களின் எதிர்கால வாழ்க்கை வரையிலான மொத்த காலஅளவையும் அதற்கான நுட்பங்களையும் விளக்கி சொல்கின்றது.இலக்கு தொடர்பான எமக்குள் செய்யவேண்டிய சில மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக விவரித்துகூறுகின்றது.

உங்கள் வெற்றிக்கான மாபெரும் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தை தருகின்றது.ஒரு யானையைஎவ்வாறு சாப்பிடுவது..? ஒரு நேரத்தில் ஒரு கடி.. அதாவது யானை போல் உள்ள பெரிய ஒரு வேலையைஎவ்வாறு செய்து முடிப்பது..? பெரிய வேலையை சிறு துண்டுகளாக பிரித்து ஒரு நேரத்தில் ஒரு துண்டு வேலை..

நீங்கள் இலக்குகள்,வாழ்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கான பக்கத்தையும் உங்களுக்குகாட்டுகின்றது.உங்கள் ஆற்றலை எவ்வாறு பிரித்து கொள்வது? எதற்கு எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது எனகுறிப்பிட்டு கால வரைகளுடன் கணிக்க உதவுகின்றது.

 உங்கள் இலக்குகள் நோக்கி இலகுவாக முன்னேறுவதற்கான நடைமுறைகள்,தந்திரங்கள்,தடைநீக்கிகளை , சிந்தனை முறைகள், நீண்டகால நோக்குகள், நிகழ்கால தேர்ந்தெடுப்புக்கள் , காலகெடுகள் , வீண்அழுத்தங்கள் , முட்டுகட்டைகள், மட்டுபடுத்தும் காரணிகள் , முக்கியான எடுகோள்கள் என இந்த புத்தகம்விரிவாக பேசுகின்றது.

வாழ்வில் இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.